தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Girls: ஒரு மாணவனுக்காகச் சண்டை போட்ட 30 மாணவிகள் - திருப்பூரில் அதிர்ச்சி

School Girls: ஒரு மாணவனுக்காகச் சண்டை போட்ட 30 மாணவிகள் - திருப்பூரில் அதிர்ச்சி

Mar 28, 2023, 03:44 PM IST

ஒரு மாணவனுக்காக இரண்டு மாணவிகள் தரப்பினருக்கிடையில் கொடுமைப்பிடி சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு மாணவனுக்காக இரண்டு மாணவிகள் தரப்பினருக்கிடையில் கொடுமைப்பிடி சண்டை ஏற்பட்டுள்ளது.

ஒரு மாணவனுக்காக இரண்டு மாணவிகள் தரப்பினருக்கிடையில் கொடுமைப்பிடி சண்டை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி சாலை அருகே புது ராமகிருஷ்ண புரத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

திடீரென மார்ச் 27ஆம் தேதி அன்று அதாவது நேற்று மாலை பள்ளிக்கு அருகே இருந்த காட்டுப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் திரண்டு உள்ளனர். அங்கே ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தலை முடியைப் பிடித்துக் கொண்டு சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டதைப் பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அனைவரும் சென்று அந்த சண்டையைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.

சண்டையை நிறுத்திய பொதுமக்கள் மாணவிகளிடம் சண்டைக்கான காரணம் குறித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியில் பயின்று வரும் மாணவனைக் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ் அப் மூலம் பல்வேறு அனுப்பி சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அறிந்த அந்த மாணவனின் காதலியான மாணவி எப்படி நீ என் காதலனுடன் சாட்டிங் செய்யலாம் என மற்ற மாணவர்களிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த சிக்கலைப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என இரண்டு மாணவிகளும் தங்களது தோழிகளுடன் பவானி நகர் காட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். இரண்டு தரப்பினரும் பேசும்போது சமூக முடிவு ஏற்படாமல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிப்போனதால் இருதரப்பு மாணவிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் முடியைப் பிடித்து சண்டை போடும் அளவிற்கு பிரச்னை முற்றிப் போனது. அதன் பின்னர் உடனே அங்கே வந்த பொதுமக்கள் இதனைத் தடுத்த நிறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இருதரப்பு மாணவிகளிடமும் பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருப்பூரில் பள்ளி மாணவர்கள் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்