SRHvsMI:சதம் விளாசிய MI வீரர் சூர்யகுமார் யாதவ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை அணி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Srhvsmi:சதம் விளாசிய Mi வீரர் சூர்யகுமார் யாதவ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை அணி

SRHvsMI:சதம் விளாசிய MI வீரர் சூர்யகுமார் யாதவ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை அணி

Marimuthu M HT Tamil
May 07, 2024 12:02 AM IST

SRHvsMI: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

மும்பை: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024, டி20 கிரிக்கெட் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ், 
( மே 6, 2024) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தனது சதத்தைக் கொண்டாடினார்.
மும்பை: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024, டி20 கிரிக்கெட் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ், ( மே 6, 2024) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தனது சதத்தைக் கொண்டாடினார். (PTI)

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில், 55ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸில் தோற்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேண்டுகோளுக்கிணங்க, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

இதில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். அதில் டிராவிஸ் ஹெட், 48 ரன்கள் எடுத்தபோது, சாவ்லாவின் பந்தில் அவுட்டானார். இரண்டாவது வீரரான அபிஷேக் சர்மா, 11 ரன்கள் எடுத்தபோது, பும்ராவின் பந்தில் அவுட்டானார்.

அதன்பின் மூன்றாவதாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்தபோது, கம்போஜ்ஜின் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களமிறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி, 20 ரன்கள் எடுத்தபோது, பாண்டியாவின் பந்தில் கம்போஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன்பின், சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியின் மிடில் ஆர்டர் தடுமாறியது. அதில் ஹெயின்ரிச் க்ளசென் 2 ரன்களும், மர்கோ ஜன்சென் 17 ரன்களும், ஷபஸ் அகமது 10 ரன்களும், அப்துல் சமது 3 ரன்களும் எடுத்து, அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அதன்பின் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ், 17 ரன்களில் 35 ரன்கள் வரை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது பார்ட்னராக ஆடிய, சன்வீர் சிங் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதாபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு, 173 ரன்கள் எடுத்தது.

சேஸிங்கில் பட்டையைக் கிளப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி:

மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அதன்பின் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஆரம்பத்தில் தடுமாறியது. அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷன் 9 ரன்களும், ரோஹித் சர்மா 4 ரன்களும், நமன் திர் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். 

நான்காவதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், நிதானமாக ஆடி, 102 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு நல்ல பார்ட்னராக செயல்பட்ட திலக் வர்மா 37 ரன்கள் வரை எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உதிரியாக 22 ரன்கள் வரை கிடைத்தது. இதன்மூலம் 17.2 ஓவருக்கு மூன்று விக்கெட் இழப்புக்கு, வெற்றி இலக்கான 174 ரன்களை அசால்ட்டாக எட்டியது, மும்பை இந்தியன்ஸ் அணி.

இதன்மூலம், 7 விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அபாரவெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் அணியின் சார்பில் புவனேஸ்குமார், ஜன்சென், பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமாக இருந்த சூர்யகுமார் யாதவ்-க்கு, மேன் ஆஃப் தி மேட்ச் கொடுக்கப்பட்டது. இதில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.