தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Life Prisoners Released : 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!

Life Prisoners Released : 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!

Divya Sekar HT Tamil

Sep 24, 2022, 11:32 AM IST

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாள் கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில், சிறைவாசம் அனுபவித்து வரும் நீண்ட நாள் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரக் குறிப்புகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தது.

அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்து மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

டாபிக்ஸ்