தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கொரோனா Bill கேட்ட Ops! மா.சு பதிலால் பேரவையில் சிரிப்பலை!

கொரோனா Bill கேட்ட OPS! மா.சு பதிலால் பேரவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil

Mar 29, 2023, 11:12 AM IST

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வங்கிய ஓட்டல்களுக்கு இன்னும் பில்கள் செட்டில் செய்யப்படவில்லை என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்
கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வங்கிய ஓட்டல்களுக்கு இன்னும் பில்கள் செட்டில் செய்யப்படவில்லை என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வங்கிய ஓட்டல்களுக்கு இன்னும் பில்கள் செட்டில் செய்யப்படவில்லை என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பதிலளித்து பேசினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

இன்றைய தினம் காலையில் நீர்வளம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மானிய கோரிக்கையும், மாலையில் இயக்கூர்திகள் துறையின் மானிய கோரிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கேள்வி நேரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் “கடந்த கொரோனா தொற்று காலத்தில் தொண்டுள்ளத்தோடு மருத்துவ பணி செய்த டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் உணவு வழங்கிய ரெஸ்டாரண்டுகளுக்கு இன்னும் உரிய பணம் தரவில்லை என்ற செய்தி என்னிடம் தரப்பட்டது. இது குறித்து அமைச்சரிடம் அறிய விரும்புகிறேன்” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் ஏற்கெனவே சட்டமன்றத்தில் இது பற்றி விவாதித்துள்ளோம். நியாமான கட்டணத்தில் நியாமான உணவை வழங்கிய நியாமான பில்களை செட்டில் செய்துவிட்டோம். 

அநியாயமான முறையில் (பேரவையில் சிரிப்பலை) ஓட்டலே இல்லாமல் உணவை கொடுத்ததாக சொல்லப்பட்டவர்களுக்குத்தான் பில்கள் செட்டில் செய்யாமல் வைத்துள்ளோம். அதுவும் கூட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே உணவை வழங்கி இருந்தால் பில் நிச்சயமாக செட்டில் செய்யப்படும் என்றார்.

டாபிக்ஸ்