தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’முயற்சி! முயற்சி செய்கிறேன்’ பூவை ஜெகன்மூர்த்தியை கலாய்த்துவிட்ட துரைமுருகன்!

’முயற்சி! முயற்சி செய்கிறேன்’ பூவை ஜெகன்மூர்த்தியை கலாய்த்துவிட்ட துரைமுருகன்!

Kathiravan V HT Tamil

Mar 30, 2023, 10:27 AM IST

அமைச்சர் துரைமுருகனின் இந்த நையாண்டி பதிலால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
அமைச்சர் துரைமுருகனின் இந்த நையாண்டி பதிலால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அமைச்சர் துரைமுருகனின் இந்த நையாண்டி பதிலால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் கேள்வி நேரத்தின் போது புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதியின் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

“மோர்தனா அணையில் இருந்து வரும் நீர் வீணாக பாலாற்றில் கலந்து கடலுக்கு செல்கிறது. அதை பாக்கம் ஏரிக்கு திருப்புவிட்டு குடியாத்தம் நகருக்கு குடிநீர் பயன்பாட்டுக்காக திருப்ப வேண்டும்.

இது அமைச்சரின் சொந்த ஊர் என்பதால் பம்பிங் மூலமாவது ஏரிக்கு குடிநீரை ஏற்ற முயற்சி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்

இதற்கு பதிலளித்த துரைமுருகன் ”பாக்கம் ஏரி முறைப்படுத்தாத ஏரி, இதன் ஆயக்கட்டு 214 ஏக்கர் மட்டும்தான். கொள்ளவு மிக குறைவாக உள்ளதால் 3.15 மீட்டர் உள்ளதால் பம்பிங் உள்ளது சிரமம், இந்த ஏரியின் தண்ணீர் கடலுக்கு செல்லவில்லை” என்றார்.

அமைச்சர் அவர்களின் கருத்து மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மறு பரிசீலனை செய்ய வேண்டும், தட்டப்பாறை வழியாக சுற்றிக்கொண்டு கால்வாயை கொண்டு வந்தால் கண்டிப்பாக ஏரியில் ஏற்ற வாய்ப்பு உள்ளது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மறு பரிசீலனை செய்யுங்கள்; அதற்கான முயற்சியை எடுக்கவும் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், தண்ணீ ஏரிக்கு போகுதோ இல்லையோ; ஆனால் எனது நீண்டநாள் நண்பர் ஜெகன் மூர்த்தி திருப்பி திருப்பி சொன்னதால் நானும் முயற்சி முயற்சி செய்து பார்த்து முடிந்த அளவுக்கு செய்கிறேன் என்றார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த நையாண்டி பதிலால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

பின்னர் பேசிய பிச்சாண்டி எம்.எல்.ஏ, கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியில் நந்தன் கால்வாயில் வீணாகும் நீரை சரி செய்ய வேண்டும் என்றும் குப்பநத்தம் அணைக்கட்டுக்கு நிலம் கொடுத்த கிராம மக்களுக்கே தண்ணீர் போகாமல் இருக்கும் நிலை உள்ளது என்றும் லிப்ட் இரிகேஷன் மூலம் பாசன வசதி செய்யப்படுமா என்றும் ஒரே நேரத்தில் மூன்று கேள்விகளை எழுப்பினார்.

மாண்புமிகு பிச்சாண்டி அவர்கள் இந்த பிரச்னையில் அதிக கவனம் உள்ளவர். நான் ஜெகன் மூர்த்தி கேள்விக்கு மட்டும்தான் பதில் தயார் செய்துவந்தேன். இவ்வுளவு அக்கறை இருக்கிற பிச்சாண்டி சும்மா இருக்குற நேரத்துல ஒரு கேள்வி எழுதி போட்டு இருந்தா விவரமா பதில் சொல்லி இருப்பேன். எனவே கேள்வி எழுதி போடவும்.

டாபிக்ஸ்