தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Finance Minister Ptr Palanivel Thiagarajan's Reply To Bjp Mla Vanathi Srinivasan's Question On Expansion Of Coimbatore Airport In The Assembly

PTR: அதானியை வம்புக்கு இழுத்து வானதியை சீண்டிய பிடிஆர்! பேரவையில் சலசலப்பு

Kathiravan V HT Tamil

Mar 28, 2023, 02:41 PM IST

PTR Vs Vanathi Srinivasan: கடந்த மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார்.
PTR Vs Vanathi Srinivasan: கடந்த மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார்.

PTR Vs Vanathi Srinivasan: கடந்த மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார்.

கோவை விமான நிலைய விரிவாகத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கோவை தெற்கு தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசிய கருத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கோவை விமானநிலையத்தில் ஏறத்தாழ 80 சதவீதத்திற்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு 1228 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’உஷாரா இருங்க! அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும்’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Chief Minister Stalin: ஆறுநாட்கள் கொடைக்கானலில் தங்கும் முதலமைச்சர் - டிரோன்கள் பறக்கத் தடை விதிப்பு

Weather Update: 'வெப்ப அலை வீசும்.. பார்த்து மக்களே.. வெளியில் சுத்தாதீங்க':வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Wet Land : பரந்தூர் ஈரநிலங்கள் காக்கப்படுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்யுமா – சூழல் ஆர்வலர்கள் கேள்வி!

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் எடுத்த முடிவின் அடிப்படையில் இலவசமாக மத்திய அரசுக்கு நிலத்தை கொடுக்கிறோம்.

இந்த நிலையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு விமான நிலையங்களை விமான போக்குவரத்து ஆணையம் இலவசமாக வழங்கி கொண்டிருந்தார்கள்.  அந்த நிறுவனம் எது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்

இதனை தடுக்க, ஒப்பந்தத்தை மாற்றும் வகையில் இனி மாநில அரசு இலவசமாக நிலம் தராது, குத்தகை முறையில்தான் அரசு நிலங்களை கொடுக்கும். தனியாருக்கு விமான நிலையம் செல்லும் பட்சத்தில் புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லி உள்ளோம்.

ஆனால் குத்தகை கொடுத்த பிறகு துணை குத்தகையாக நாங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்குவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. 

அதெல்லாம் சரிவராது, அவர்கள் விற்பதற்கு பதிலாக அதானிக்கு குத்தகையாக அவர்கள் கொடுத்துவிடுவார்கள். தனியாருக்கு எந்த வகையில் இதை கொடுத்தாலும் எங்களுக்கு ஒழுங்கான பணம் வந்து சேர வேண்டும் என்று கூறி உள்ளோம் அது இன்னும் நிலுவையில் உள்ளது.  

மாண்புமி உறுப்பினர் அக்கட்சியில் உள்ள துறை அமைச்சருடன் விவாதித்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

கடன் எதற்காக வாங்குகிறோம். வருவாய் கணக்கில் வாங்கும் கடன் பாதிக்க கூடிய கடன்., நிதிக்கணக்கில் எடுக்கும் கடன் முதலீட்டுகாக வாங்கப்படும் கடன்.

சந்தை கடன், சிறுசேமிப்பு நிதி கடன், மறைமுக வரி கடன் ஆகிய மூன்று வகையான கடன்கள் உள்ளது. சென்ற அரசு இருந்து ஆண்டுகளில் 34 ஆயிரம் கோடி மறைமுக கடனை வாங்கி உள்ளார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மறைமுக கடனாக 700 கோடி அளவுக்குத்தான் வாங்கி உள்ளோம்.

ஜிஎஸ்டி நிலுவைத்தொகையில் பெரும்பான்மையாக திருப்பி பெற்றுள்ளோம். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஏற்கெனவே பலவகை சீர்த்திருத்தங்களை செய்துள்ளோம். அடுத்து மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் இன்னும் சீர்த்திருத்தங்களை செய்ய உள்ளோம் என சட்டப்பேரவையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

டாபிக்ஸ்