தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விடாது பெய்யும் மழை..உயரும் ஏரிகளின் நீர்மட்டம் - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் என்ன?

விடாது பெய்யும் மழை..உயரும் ஏரிகளின் நீர்மட்டம் - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் என்ன?

Oct 15, 2024, 09:56 PM IST

google News
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் விடாது பெய்யும் மழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் பற்றி பார்க்கலாம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் விடாது பெய்யும் மழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் பற்றி பார்க்கலாம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் விடாது பெய்யும் மழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் பற்றி பார்க்கலாம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி ஆகும். நேற்றைய நிலவரப்படி ஏரிகளில் 3,882 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.

சென்னை ஏரிகளின் தற்போதைய நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக பூண்டி, சோழவரம், செங்குன்றம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து வருகின்றன. இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. எனவே இந்த ஏரிகளின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

வட கிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் அனைத்து ஏரிகளிலும் சில அடிகள் வரை உயர்ந்துள்ளன

ஏரிகளின் நீர்வரத்து நேற்றும் இன்றும்

சோழவரம் ஏரி நேற்று 0.23 ஆக இருந்த நிலையில், தற்போது 0.77 என உயர்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 18.86 அடியாகும்

புழல் ஏரி நேற்று 14.97 என இருந்த நிலையில், இன்று 15.00 அடியாக உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 21.20 அடி என உள்ளது.

கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 36.61 அடி நீர்வரத்தில், நேற்று 30.19 அடி என இருந்த நிலையில், 30.26 அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நேற்று 13.16இல் இருந்து, இன்று 13.23 அடி ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 24 அடியாக உள்ளது.

வீராணம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக வீராணம் ஏரியில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

வீராணம் ஏரி மொத்த கொள்ளளவு 15.60 அடியாகும். இதில் நேற்று வரை நீர் இருப்பு 13.40 அடியாக இருந்தது. இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர் இருப்பு 13.75 அடியாக உள்ளது.

நீர்வள ஆதரத்துறை உத்தரவு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த பகுதிகளில் அமைந்திருக்கும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்தை உடனுக்குடன் கண்காணிக்க அதிகாரிகளுக்கு நீர்வள ஆதாரத் துறை உத்தரவிட்டுள்ளது

ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு தொடர்பான தகவல்களையும் தலைமை இடத்துக்கு உடனடியாக தெரிவிக்கும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்த நிலையில் இன்று (15-10-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை