Chennai Floods: புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது! மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் - அமைச்சர் கொடுத்த அப்டேட்
புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாகவும், மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடைய தேவையில்லை எனவும் கூறி நீண்ட விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதரங்களில் ஒன்றாக இருந்து வரும் புழல் ஏரியின் ஒரு பகுதியில் கரை உடையும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சுமார் 330 அடி கொள்ளளவு இந்த ஏரியில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்தானது 8 ஆயிரம் கன அடியாக இருந்து வருகிறது.
தற்போது மழை பொழிவு நின்று இரண்டு நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் நீர்வரத்தானது மெல்ல குறைந்துள்ளது. இதையடுத்து புழல் ஏரியின் ஒரு பகுதி கரை உடையும் நிலையில் இருப்பதாக உலா வரும் தகவலுக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய ஏரியாகும். திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ஒன்றியத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் நீர் பரப்பு 20.27 சதுர கிலோ மீட்டர். ஏரியின் முழு உயரம் 2,120 அடி, முழு கொள்ளளவு 3,300 மி.கன அடி, கரையின் நீளம் 7,090 மீ ஆகும்.
டிசம்பர் 7ஆம் தேதியான இன்று காலை நிலவரப்படி 20 அடி நீர் இருப்பும், காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்தானது 550 கன அடியாகவும் உள்ளது. தற்போது ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்கல் மிக்ஜாம் புயல் காரணமாக அதிக அளவு கனமழை பெய்ததால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் விநாடிக்கு 5,500 கன அடி வெளியேற்றப்பட்டது.
அப்போது கடுமையான சூறாவளி காற்று ஏற்பட்டதால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக கரை பகுதியில் இருக்கும் கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின் பகுதி கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவரின் பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கல்லால் ஆன ஆப்ரான் சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை.
கலங்கல் வழியாக அலைகள் காரணமாக தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டுப்படுத்தப்படும் பணி நடைபெறுகிறது"
இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்