தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chennai Drinking Water : சென்னையில் வசிப்பவரா? அங்கு நீங்கள் பருகும் குடிநீர் பாதுகாப்பானதா? எத்தனை ஆபத்து பாருங்கள்!

Chennai Drinking Water : சென்னையில் வசிப்பவரா? அங்கு நீங்கள் பருகும் குடிநீர் பாதுகாப்பானதா? எத்தனை ஆபத்து பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 07, 2024 06:57 AM IST

Chennai Drinking Water : ‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்கள் - Forever Chemicals’ சென்னை குடிநீரில் 19,400 மடங்கு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Chennai Drinking Water : சென்னையில் வசிப்பவரா? அங்கு நீங்கள் பருகும் குடிநீர் பாதுகாப்பானதா? எத்தனை ஆபத்து பாருங்கள்!
Chennai Drinking Water : சென்னையில் வசிப்பவரா? அங்கு நீங்கள் பருகும் குடிநீர் பாதுகாப்பானதா? எத்தனை ஆபத்து பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது சென்னையில் IIT-M செய்த ஆய்வு முடிவுகள், "Occurrence of Forever chemicals in Chennai Waters, India" என்ற தலைப்பில், "Environmental Sciences Europe Journal-March,2024" வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு முடிவுகளில் சென்னை குடிநீரில், ‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களின்’ அளவு, அமெரிக்க சூழல் பாதுகாப்புக் கழகம்(EPA) பரிந்துரைத்த அளவை விட 19,400 மடங்கு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும், Perfluoroalkyl substances+ Polyfluoroalkyl substances என்ற வேதிப்பொருட்களை அளப்பதை கூட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேகொள்ளாத நிலையே இந்தியாவில் உள்ளது.

மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் Polyfluoroalkyl substances-PFAS-பெருங்குடி குப்பைக் கிடங்கு மற்றும் அருகில் உள்ள நிலத்தடி நீர், அடையார் ஆறு, பக்கிங்காம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் ஏரியிலிருந்து வீட்டு உபயோகத்திற்கு விநியோகிக்கப்படும் குடிநீரில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.

‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களின்’ பெயர் காரணம்

அவை சுற்றுச்சூழலை வந்தடைந்த பின் எளிதில் மக்கவோ, சிறு துகள்களாகவோ உடையாத தன்மை கொண்டிருக்கும்.

எளிதில் ஒட்டாத சமையல் பாத்திரங்கள் மற்றும் உபயோகப் பொருட்கள் (Non-stick Cook-ware)

உணவுப் பொட்டலங்கள் (Food Packaging),

நுரைத்தன்மை கொண்ட பொருட்கள் (Aqueous film-forming foams),

நீர்புகா தன்மைகொண்ட பொருட்கள் (Water-proof materials), மழை அங்கிகள் (Rain Coats), அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics) போன்ற பொருட்களில் இருந்து, ‘ என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்கள்’ கழிவுநீர், திடக்கழிவுகளை அடைந்து, பின்னர் நில மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரை அடைந்து, இறுதியில் குடிநீரை வந்தடைகிறது.

பெருங்குடி குப்பைக்கிடங்கு நிலத்தடி நீரில், Perfluoro Octane Sulphonic Acid-PFOS-ஒரு வகையான PFAS-2.72 ng/லிட்டர் என்ற அளவில் உள்ளது. ஆனால் அமெரிக்க சூழல் பாதுகாப்பு நிறுவன (EPA) பரிந்துரையின்படி, அது 0.02 ng/லிட்டர் என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.

‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்கள்’ உள்ள நீரை தொடர்ந்து குடித்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்-

ஈரல் பாதிப்பு, எடை குறைவாக குழந்தைகள் பிறத்தல், ஹார்மோன் பிரச்னைகள், மலட்டுத் தன்மை, நோய் எதிர்ப்புசக்தி குறைதல், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

பெருங்குடி குப்பைக் கிடங்கிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில், நிலத்தடி நீரில் PFASன் அளவு மிக அதிகமாக இருந்தது.

Perfluorobutane sulfonateன் அளவு 136.27 நானோகிராம்/லிட்டர் என்ற அளவில் உள்ளது. நீரில் அதன் அளவு 2,000 நானோகிராம்/லிட்டர் என்ற அளவில் இருக்கலாம் என இருந்தாலும், இத்தகைய ஆபத்தான வேதிப்பொருட்கள் குடிநீரில் இருப்பது கவலைக்குரிய செய்தியே.

அடையார் ஆறு, பக்கிங்காம் கால்வாயிலும்,‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களின்’ அளவு அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கழிவுநீர் உரிய சிகிச்சையின்றி அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கலப்பதே இதற்கு முக்கிய காரணம்.

அடையாறு ஆறின் மேல் நீரோட்டப் பரப்பில் (Upstream) இக்கொடிய வேதிப்பொருட்களின் அளவு அதிகமாகவும், கீழ் நீரோட்டப் பகுதிகளில் (Downstream) குறைவாகவும் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்தடையும் நீரில் Perfluorooctanoic Acid (PFOA)ன் அளவு 8.97 ng/லிட்டர் என குறைவாகவும், ஏரியிலிருந்து சிகிச்சைக்குப்பின் சென்னையிலுள்ள 40 லட்சம் பேருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நீரில் PFOAன் அளவு 20.4 நானோகிராம்/லிட்டர் என மிக அதிகமாகவும் உள்ளது. அதற்கு காரணம் PFAS உருவாகக் காரணமாக இருக்கும் வேதிப்பொருட்கள் (Precursors) சிகிச்சையின்போது தூண்டப்பட்டு, அதிகளவில் PFAS உற்பத்தியாவதாலே, மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் ‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களின் அளவு’ அதிகமாக இருந்து, அதிக சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சிகிச்சைக்குப்பின் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து High Density Polyethylene (HDPE), PVC குழாய்கள் மூலம் வீடுகளை குடிநீர் அடையும்போது, PFASன் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னை மற்றும் தமிழக குடிநீரின் தற்போதைய சிகிச்சையில், திடக்கழிவுகள், கரிமமற்ற வேதிப்பொருட்கள் (Inorganic chemicals) மட்டுமே நீக்கப்படுகின்றன.

PFAS போன்ற கரிம (Organic)ப் பொருட்களை நீக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

குடிநீரை வழக்கமான சிகிச்சைக்குப் பின் Activated carbon filters +Photo-catalytic Reactions மூலம் மட்டுமே ‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களை’(PFAS) நீக்க முடியும் என்பதால்,

தமிழக அரசு "என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்கள்" உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களை தடை செய்ய வேண்டும்.

குடிநீரில் PFASன் பாதுகாப்பான அளவை நிர்ணயித்து, குடிநீரில் அதன் அளவு மிகாமல் சிகிச்சை அளிக்க ஆவண செய்ய வேண்டும்.

குடிநீரில் PFAS வேதிப்பொருட்களை கண்டறியும் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை நீக்கி, மக்களின் அடிப்படை உரிமையான சுகாதாரத்தை பேணிகாக்க, (குடிநீரில் PFASன் அளவை தேவையான அளவிற்கு குறைத்து) உரிய தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்