தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Diwali Festival:தீபாவளி பண்டிகை, ஆசிரியர் தகுதித்தேர்வு உள்பட முக்கிய செய்திகள்

Diwali Festival:தீபாவளி பண்டிகை, ஆசிரியர் தகுதித்தேர்வு உள்பட முக்கிய செய்திகள்

Divya Sekar HT Tamil

Sep 23, 2022, 05:42 PM IST

தீபாவளி பண்டிகை, ஆசிரியர் தகுதித்தேர்வு உள்பட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.
தீபாவளி பண்டிகை, ஆசிரியர் தகுதித்தேர்வு உள்பட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.

தீபாவளி பண்டிகை, ஆசிரியர் தகுதித்தேர்வு உள்பட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் 200 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

பல்லாவரம் அருகே சரியாகப் படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி துப்பட்டாவால் தன் கழுத்தை தானே இறுக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை இருவேளைகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் பரப்புரை கழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது கடும் கண்டனதிற்குரியது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

B.Ed மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்கிறது. tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்.26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

செங்கம் அரசு மருத்துவமனை பின்புறம் அடையாளம் தெரியாத பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டுள்ளது.

டாபிக்ஸ்