தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Temple Festival: கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி; ஆபாசம் கூடவே கூடாது: டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு

Temple Festival: கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி; ஆபாசம் கூடவே கூடாது: டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு

Karthikeyan S HT Tamil

Jun 01, 2023, 10:46 PM IST

DGP Sylendra Babu: கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
DGP Sylendra Babu: கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

DGP Sylendra Babu: கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் மனுதாரர் அளிக்கும் மனுவின் அடிப்படையில் 7 நாட்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்ற உத்தரவே போதுமானது இனி புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியது இல்லை என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை. ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். இதனைக் கடைப்பிடிக்குமாறு, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அந்த வழிகாட்டுதல்களின்படி,"கோயில் விழாக்களில் ஆடல் பாடல்,கரகாட்டம், கலாச்சார நாடகம் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால், அதை காவல்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து 7 நாட்களுக்குள் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும்.

கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். 7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடத்தி கொள்ளலாம். ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண் கலைஞர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஆபாச ஆடையில் சித்தரிக்கக் கூடாது. பெண் கலைஞர்களுக்கு வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்தக் கூடாது. இரட்டை அர்த்த பாடல் நிகழ்ச்சியில் இடம்பெற கூடாது." என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்