தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்..அமைச்சர், சாம்சங் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்..அமைச்சர், சாம்சங் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

Oct 15, 2024, 11:07 PM IST

google News
தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சிஐடியு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், ம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்
தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சிஐடியு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், ம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்

தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சிஐடியு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், ம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சாம்சங் நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதன் தொடர்ச்சியாக போராட்டத்தை முடக்கும் விதமாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்னைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி!

இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த C.I.T.U. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், தொழிலாளர்கள் அனைவருக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றியும்!

பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, நல்ல முடிவுக்குக் கொண்டுவர, சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் ஏ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், சி.வி. கணேசன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்! நன்றி!

திராவிட முன்னேற்றக் கழக அரசானது என்றும் தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசு! அந்த நிலைப்பாட்டில் இருந்து அது என்றும் மாறாது; தொடர்ந்து செயலாற்றும்.

'நடந்தவற்றை நம்மைக் கடந்தனவாகக்' கருதி, அவற்றை நாம் பின்தள்ளி, ஒரு புதிய துவக்கத்துக்காக, வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல, சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டு அன்போடு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்."

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

இதன்படி பொதுப்பணிகள் துறை அமைச்சர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள். இப்பேச்சுவார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தப் பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

பழிவாங்கல் நடவடிக்கை, நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை கூடாது

தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நிர்வாகத்துக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொதுகோரிக்கையின் மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு,வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள்"

இவ்வாறு அரசுத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி