அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார் ஆளுநர் - அமைச்சர் ஏ.வ. வேலு பேச்சு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார் ஆளுநர் - அமைச்சர் ஏ.வ. வேலு பேச்சு

அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார் ஆளுநர் - அமைச்சர் ஏ.வ. வேலு பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 07, 2023 05:08 PM IST

Minister EV Velu: தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார். அவரது செயல்பாடுகளின் பின்னணியில் ஒன்றிய அரசு உள்ளதா என தெரியாது என்று பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏவ வேலு
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏவ வேலு

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியதாவது: " ரூ. 126 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது.

தென் மாவட்ட மக்களின் நலன் கருதி நூலகம் கட்டப்பட்டு வருகிறது, இங்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் தமிழ் புத்தகங்கள், 2 லட்சத்து 25 ஆயிரம் ஆங்கில புத்தகங்கள் 6 ஆயிரம் இ-புத்தகங்கள் இடம்பெற உள்ளனர. 12 ஆயிரம் ஒலை சுவடிகளும் நூலகத்தில் வைக்கப்பட உள்ளன.

இந்த நூலகம் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நூலக கட்டுமான பணிகள் நிறைவு பெற உள்ளது. மே 5 ஆம் தேதிக்கு பின்னர் நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கும் பணிகள் தொடங்கும்" என்றார்.

இதைத்தொடர்ந்து அமைச்சரிடம் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அரசை ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும். அரசு கொண்டு வரும் திட்டங்களை வேகப்படுதுபவராக ஆளுநர் இருக்க வேண்டும். ஆனால் மக்களுக்காக திட்டங்கள் கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு கோப்பு அனுப்பினால் ஒப்புதல் வழங்க மறுக்கிறார். இதனால், உயர்க்கல்வி பாதிக்கப்படுகிறது.

ஆளுநர் அரசின் கோப்புகளை பார்க்காமல் இருப்பது, அப்படி கோப்புகளை பார்த்தாலும் ஏதாவது காரணம் செல்வதை ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.

தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநரை வைத்து கொண்டு அரசு எப்படி செயல்படும்?

முதலமைச்சர் வேகமாக செயல்படுவது போல், ஆளுநர் மிக வேகமாக செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்ல திட்டங்கள் கொண்டு வர முடியும்.

ஆளுநர் விவகாரத்தில் ஒன்றிய அரசை குற்றம் சொல்ல முடியாது. ஆளுநர் தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதன் பின்னனியில் ஒன்றிய அரசு செயல்படுகிறதா என தெரியாது"

இவ்வாறு அவர் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.