தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அப்பாடா! வெயிலுக்கு குட்டி பிரேக்.. நாளை முதல் மழை.. எங்கு தெரியுமா?

அப்பாடா! வெயிலுக்கு குட்டி பிரேக்.. நாளை முதல் மழை.. எங்கு தெரியுமா?

Divya Sekar HT Tamil

Feb 26, 2023, 03:06 PM IST

Today Weather Update : தமிழகத்தில் நாளை முதல் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Today Weather Update : தமிழகத்தில் நாளை முதல் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Today Weather Update : தமிழகத்தில் நாளை முதல் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (26-02-2023) இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

தொடர்ந்து நாளை (பிப்.27) முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், மார்ச் 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்