தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கோவை அருகே 'இந்துக்கள் வாழும் பகுதி' என்ற அறிவிப்பு பலகையால் எழுந்த சர்ச்சை!

கோவை அருகே 'இந்துக்கள் வாழும் பகுதி' என்ற அறிவிப்பு பலகையால் எழுந்த சர்ச்சை!

Aug 17, 2022, 09:09 PM IST

இந்துக்கள் வாழும் பகுதி என குறிப்பிட்டு கோவை அருகே உள்ள கிராம பகுதி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்கள் வாழும் பகுதி என குறிப்பிட்டு கோவை அருகே உள்ள கிராம பகுதி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் வாழும் பகுதி என குறிப்பிட்டு கோவை அருகே உள்ள கிராம பகுதி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே காடுவெட்டிபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நுழைவுவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி. இங்கு மத பிரச்சாரங்கள் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. இதை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் குறிப்பிட்டு அந்த அறிவிப்பு பலகையில் வாசகங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆனால் காடுவெட்டிபாளையம் ஊராட்சி மன்றத்துக்கு தெரியாமலும், முறையான அனுமதி பெறாமலும் குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்களால் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகையால் அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

அனைத்து மதத்தினரும் வாழும் அந்தப் பகுதியில் தற்போது இந்த அறிவிப்பு பலகை குறித்தான புகைப்படங்கள் வாட்ஸ்அப் உள்பட சமூக வலைத்தளங்களில் பரவி, இதுதொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.