தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Met Amit Shah: அமித்ஷாவை சந்தித்த ஈபிஎஸ்! கூட்டணிக்கு பக்கா ஸ்கெட்ச்?

EPS Met Amit Shah: அமித்ஷாவை சந்தித்த ஈபிஎஸ்! கூட்டணிக்கு பக்கா ஸ்கெட்ச்?

Kathiravan V HT Tamil

Apr 26, 2023, 10:18 PM IST

நாளை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 50 நிமிடங்கள் வரை நீடித்தது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நடந்த ஆலோசனை

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட பின்னர் அமித்ஷா உடனான சந்திப்பு முதல்முறையாக நடைபெறுகிறது.

மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும்., அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைப்பது, தொகுதி பங்கீட்டு விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருப்பார் என்று கூறப்படுகிறது.

டாபிக்ஸ்