தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நிர்வாகிகளுடன் தனித் தனியாக 5 நிமிடம் பேச்சு! தனித்து போட்டி? - தவெக கட்சியின் 26 தீர்மானங்கள் - முழு விவரம்

நிர்வாகிகளுடன் தனித் தனியாக 5 நிமிடம் பேச்சு! தனித்து போட்டி? - தவெக கட்சியின் 26 தீர்மானங்கள் - முழு விவரம்

Nov 03, 2024, 10:23 PM IST

google News
நிர்வாகிகளுடன் தனித் தனியாக 5 நிமிடம் பேச்சு நடத்திய விஜய்யிடம் பலரும் 2026இல் தனித்து போட்டியிடுவது பற்றி தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். விஜய்யும் பொறுமையாக இதை கேட்டு புன்னகைத்தபடியே இருந்துள்ளார். இன்றைய தவெக ஆலோசனை கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிர்வாகிகளுடன் தனித் தனியாக 5 நிமிடம் பேச்சு நடத்திய விஜய்யிடம் பலரும் 2026இல் தனித்து போட்டியிடுவது பற்றி தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். விஜய்யும் பொறுமையாக இதை கேட்டு புன்னகைத்தபடியே இருந்துள்ளார். இன்றைய தவெக ஆலோசனை கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிர்வாகிகளுடன் தனித் தனியாக 5 நிமிடம் பேச்சு நடத்திய விஜய்யிடம் பலரும் 2026இல் தனித்து போட்டியிடுவது பற்றி தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். விஜய்யும் பொறுமையாக இதை கேட்டு புன்னகைத்தபடியே இருந்துள்ளார். இன்றைய தவெக ஆலோசனை கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் தளபதி விஜய் பங்கேற்ற நிலையில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை, உட்கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கட்சியினருடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தவெக கட்சியின் தீர்மானங்கள்

தவெக கட்சியின் முக்கிய தீர்மானங்களாக முக்கிய கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, ஆளுநர் பதவியை அகற்றுவது, நீட் தேர்வை ரத்து செய்வது, பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு ஆகியவை உள்ளன. தவெக கட்சியின் 26 தீர்மானங்கள் பின்வருமாறு

  • கொள்கைகள், கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்றும் தீர்மானம்
  • கொள்கை திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
  • மதசார்ப்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்க தீர்மானம்
  • ஜனநாயக கொள்கை தீர்மானம்
  • பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
  • சமூக நீதிக் கொள்கை தீர்மானம்
  • மாநில தன்னாட்சி உரிமை கொள்கை தீர்மானம்
  • விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
  • கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து தொடங்க கோரும் தீர்மானம்
  • ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானம்
  • மொழி கொள்கை தீர்மானம்
  • மக்கள் மீது நிதிச் சுமை திணிப்பு சார்ந்த தீர்மானம்
  • சட்டம் - ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்
  • மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க வலியுறுத்துதல்
  • மதுக்கடைகளை மூட வலியுறுத்தல் கொள்கை தீர்மானம்
  • உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்துதல்
  • தமிழ்நாட்டின் தொன்மப் பெருமை பாதுகாப்பு
  • விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு பெருமை சேர்க்க வலியுறுத்துதல்
  • கண்ணயமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்துதல்
  • முதியோர் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்
  • இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
  • இஸ்லாமியர் உரிமை தீர்மானம்
  • நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துதல்
  • தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்
  • ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம்
  • கட்சி நிர்வாகிகள் உயிரிழப்புக்கு இரங்கல் தீர்மானம்

நிர்வாகிகளுடன் விஜய் தனித்தனியாக பேச்சு

இந்த கூட்டத்தில் நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூருக்கு நிர்வாகியின் காரில் விஜய் வந்திருந்தார். அப்போது அங்கிருந்தவர்களை பார்த்து விஜய் கையசைக்க தொண்டர்களும், ரசிகர்களும் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். பின்னர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்பு அளிக்க, செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு உள்ளே சென்றார்.

அதற்கு முன்னர் அங்கிருந்த ஒவ்வொருவரையும் 5 நிமிடங்கள் தனித்தனியாக வரவழைத்து பேசினார்.

இந்த மாநாடு வெற்றி அடைந்ததற்கு காரணமே நிர்வாகிகளும் தொண்டர்களும்தான். நீங்கள் இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை என கூறியதோடு, மாநாட்டில் ஏதாவது குறைகள் இருந்தால் அதையும் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தங்களது தரப்பு குறைகளை கூற, அதற்கு விஜய் அடுத்தடுத்த மாநாடுகள், பொதுக் கூட்டங்களில் அவை நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தாராம்.

அத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் 2026 தேர்தலில் தனித்து போட்டியிடுமாறு கேட்டுக்கொண்ட நிலையில், நிர்வாகிகளின் விருப்பத்தை பொறுமையாக கேட்ட விஜய் புன்னகையுடனே இருந்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை