மீனவர்களின் உரிமை.. மின்சார கட்டண மாற்றம்.. நீட் தேர்வு ரத்து..மொழி கொள்கை! - தவெக நிறைவேற்றிய தீர்மானங்கள் என்னென்ன?
மீனவர்களின் உரிமை முதல் நீட் தேர்வு ரத்து வரை..தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன என்பதினை பார்க்கலாம்.
இன்றைய தினம், சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை என்னென்ன என்பதினை இங்கே பார்க்கலாம்.
தீர்மானங்கள் அடங்கிய முழு விளக்க அறிக்கை PDF -ஆக கொடுக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் அதை கிளிக் செய்து அதனை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக வெற்றிக்கழக மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தன்னுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிவித்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரே சேர அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சீமான் விஜயின் கொள்கைகளை கூமுட்டை என்றும், திருமாவளவன் இவையெல்லாம் பழைய சரக்குதான் என்றும் விமர்சித்து இருக்கிறார்கள். இன்னும் பல அரசியல் தலைவர்கள், விஜய் மாநாடு என்பது படம் பார்ப்பது போல இருந்தது என்றும் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார் விஜய்
அரசியல் பாம்பு
மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதாவது, “ ஒரு குழந்தை அம்மா என்று அழைக்கும் போது அந்த அம்மாவிற்கு சிலிர்ப்பு ஒன்று வரும் அல்லவா…? அந்த சிலிர்ப்பு எப்படி இருந்தது என்று அந்த அம்மாவிடம் கேட்டால், அவரால் அதனை அழகாக விவரித்து சொல்ல முடியும். ஆனால், அந்த உணர்வு எப்படி இருந்தது என்று அந்த குழந்தையை கேட்டால், அந்தக் குழந்தை எப்படி அதைச் சொல்லும். முதலில் அந்த குழந்தைக்கு எப்படி சொல்லத் தெரியும்?
குழந்தைக்கு, பால் வாசம் மாறாமல் வெள்ளந்தியாய் சிரிக்க மட்டும் தானே தெரியும்... அதை சிலாகித்து, அதனை வார்த்தையில் சொல்வதற்கு அந்தக்குழந்தைக்கு தெரியாது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு உணர்வோடு தான் நான் இங்கு நிற்கிறேன். அம்மாவுடன் கூட தன் உணர்வை சொல்லத் தெரியாத அந்த குழந்தையின் முன்னால் ஒரு பாம்பு வந்து படம் எடுக்கிறது என்றால் என்ன நடக்கும்?
பயமே கிடையாது
யார் முன்னால் அப்படி ஒரு பாம்பு வந்து நின்றாலும், அவர் அலறி அடித்துக் கொண்டுதான் ஓடுவார். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற ஒரு பழமொழியே இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை முன்னால் அந்த பாம்பு வந்தால் என்ன செய்யும் தெரியுமா? தன் அம்மாவை பார்த்து சிரித்த அதே சிரிப்போடு கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், அந்தப் பாம்பை தன்னுடைய கையில் பிடித்து விளையாட ஆரம்பிக்கும்.
அப்படியானால், அந்தக்குழந்தைக்கு பாம்பை கொண்டால் பயம் இல்லையா என்ற கேள்வி இங்கே வரும். பாச உணர்வே என்னவென்று சொல்லத் தெரியாத அந்த குழந்தைக்கு பய உணர்வை எப்படி வெளிப்படுத்த தெரியும்?.
இங்கே அந்த பாம்பு தான் அரசியல். அந்தப் பாம்பை கையில் பிடித்து விளையாடுவது தான் உங்கள் நான். அரசியலுக்கு நாம் குழந்தைதான் இது அடுத்தவர்களுடைய கமெண்ட். ஆனால் பாம்பாக இருந்தாலும் பயம் இல்லை என்பது தான் நம்முடைய கான்ஃபிடன்ஸ். அரசியல் ஒன்றும் சினிமாத்துறை இல்லையே.. கொஞ்சம் சீரியஸாதானே இருக்கும். பாம்பாக இருந்தாலும், பாலிட்டிக்ஸ்சாக இருந்தாலும் கையில் எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்த பின்னர், சீரியஸோடு கொஞ்சம் சிரிப்பையும் கலந்து செயல்படுவது தான் நம்முடைய ரூட்!
அப்படி செயல்பாட்டில் இறங்கும் பொழுதுதான் இந்த ஃபீல்டில் நிலைத்து நிற்க முடியும், எனர்ஜியோடு இருக்க முடியும். எதிரே நிற்பவர்களை எதிர்கொள்ளவும் முடியும். அரசியல் தாறுமாறாக ஆடும் ஆட்டமல்ல; தத்துவத்தோடு ஆட வேண்டிய ஆட்டம் என்று பேச்சுக்கு சொல்லி, இங்கு கூச்சல் போட முடியாது. கவனமாத்தான் களமாட வேண்டும்
மேடைக்கு முன்னால் இருந்தாலும் சரி, நான், நீ, நாங்க, நீங்க என்பதெல்லாம் இங்கு கிடையாது. நாம் என்பதுதான் எப்போதுமே இறுதியானது. இங்கு யார் மேலே யார் கீழே என்று பாகுபாடெல்லாம் நாம் பார்க்கப் போவதே இல்லை. நம்மை பொருத்தவரை நாம் எல்லோருமே ஒன்றுதான். எல்லோருமே சமம் தான். அதனால் என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு என் உயிர் வணக்கங்கள்” என்று பேசினார்.
டாபிக்ஸ்