PHOTOS: குளு குளு ஏசி..நவீன கழிவறைகள்.. சொகுசான இருக்கைகள்.. சென்னையில் சோதனை ஓட்டத்தை தொடங்கிய வந்தே மெட்ரோ ரயில்..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Photos: குளு குளு ஏசி..நவீன கழிவறைகள்.. சொகுசான இருக்கைகள்.. சென்னையில் சோதனை ஓட்டத்தை தொடங்கிய வந்தே மெட்ரோ ரயில்..!

PHOTOS: குளு குளு ஏசி..நவீன கழிவறைகள்.. சொகுசான இருக்கைகள்.. சென்னையில் சோதனை ஓட்டத்தை தொடங்கிய வந்தே மெட்ரோ ரயில்..!

Aug 03, 2024 05:17 PM IST Karthikeyan S
Aug 03, 2024 05:17 PM , IST

  • Vande Metro First Trial Run Updates: வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து ரயில்வேயில் இருந்து பல்வேறு அறிக்கைகள் வந்தன. இதற்கிடையில், வந்தே பாரத் மெட்ரோவின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. சென்னை - காட்பாடி இடையிலான முதல் வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது.

புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வந்தே மெட்ரோ உருவாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மெட்ரோ ரயிலின் வேகத்தை விரைவாக குறைக்க முடியும். இதனால், குறைந்த நேரத்தில் அதிக ரயில் நிலையங்களில் நிற்க முடியும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(1 / 6)

12 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஏசி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள தேவையை கருத்தில் கொண்டு, அந்தந்த வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். 

(2 / 6)

கண்காணிப்புக் கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில், உள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

(3 / 6)

முதல்கட்டமாக, ஐசிஎஃப் ஆலையில் இந்த ரயிலில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்த ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

(4 / 6)

இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை - காட்பாடி இடையே இன்று (ஆகஸ்ட்.3) காலை தொடங்கியது. இந்த ரயில் வில்லிவாக்கத்தில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, காலை 9.00 மணிக்கு சென்னை கடற்கரையை அடைந்தது. தொடர்ந்து, அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10 மணிக்கு அடைந்தது.

(5 / 6)

இந்த வந்தே பாரத் மெட்ரோ நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் அருகிலுள்ள இடங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இது 100 கி.மீ தூரத்திற்குள் இயக்கப்படும். இதற்கிடையில், வங்காளத்திலும் வெவ்வேறு வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் மெட்ரோவின் இயக்கம் குறித்து ஊகங்கள் உள்ளன. ஆனால், இதுவரை இறுதி தகவல் எதுவும் வெளியாகவில்லை.   

(6 / 6)

மற்ற கேலரிக்கள்