சாஸ்திரி தாத்தா செய்த சேட்டை;அப்துல்கலாம் ரிட்டன் ஃபேண்டஸி வொர்க் அவுட் ஆனதா? சுனைனாவின் ‘ராக்கெட் ட்ரைவர்’ படம் எப்படி?
சுனைனாவின் ‘ராக்கெட் ட்ரைவர்’ திரைப்படம் அப்துல்கலாம் ரிட்டன் ஃபேண்டஸியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சாஸ்திரி தாத்தா செய்த சேட்டை;அப்துல்கலாம் ரிட்டன் ஃபேண்டஸி வொர்க் அவுட் ஆனதா? சுனைனாவின் ‘ராக்கெட் ட்ரைவர்’ படம் எப்படி?
ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கத்தில், விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன் ராமசந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ராக்கெட் டிரைவர்’. ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு கௌஷிக் க்ரிஷ் இசையமைத்து இருக்கிறார்.
கதையின் கரு:
எல்லாமே மிகச்சரியாக, நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பிரபாவுக்கு, மறைந்த ஜனாதிபதியான அப்துல்கலாம் போல பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது கனவு. ஆனால் சூழ்நிலை, அப்பா கையேந்தி பவன் நடத்த, அவன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நகர்த்த வேண்டிய நிலைமை வந்து விட்டது. தான் ஆசைப்பட்டதை நோக்கி செல்ல முடியவில்லையே என்ற இயலாமை, அவனை எந்நேரமும் எரிச்சலிலேயே வைத்திருக்கிறது.