தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman : வட மாநிலத்தவர் குறித்து அவதூறு .. சீமான் மீது வழக்குப்பதிவு!

Seeman : வட மாநிலத்தவர் குறித்து அவதூறு .. சீமான் மீது வழக்குப்பதிவு!

Divya Sekar HT Tamil

Mar 12, 2023, 10:14 AM IST

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வட மாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் சீமான் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வட மாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் சீமான் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வட மாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் சீமான் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவி வந்தது. இது இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வதந்திகள் பரப்புபவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்திருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

இந்த சம்பவத்தில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பீகாரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிந்துள்ளார். அதில், “வட இந்தியர்களைப் பிடித்து அடித்து அவர்களின் மீது வழக்கு தொடருவேன். ஒரு வாரத்திற்குள் அவர்களாகவே மூட்டையக் கட்டவைத்து விடுவேன்” என சீமான் பேசியுள்ளார்.

அந்த வீடியோவுடனான பதிவில் பிரசாந்த் கிஷோர், "போலியான வீடியோக்கள் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டுவர்களையும் விட்டுவிடக் கூடாது. ஏன், சீமான் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இன்று ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வட மாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதால், இந்திய தண்டனை சட்டம் 153(B)(c), 505(1)(c),506(1) ஆகிய பிரிவுகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்