தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tenkasi : தென்காசியில் துணிகரம்..தொழில் அதிபர் வீட்டில் 53 பவுன் நகை கொள்ளை!

Tenkasi : தென்காசியில் துணிகரம்..தொழில் அதிபர் வீட்டில் 53 பவுன் நகை கொள்ளை!

Divya Sekar HT Tamil

Mar 26, 2023, 10:35 AM IST

திருவேங்கடத்தில் தொழில் அதிபர் வீட் டில் 53 பவுன் நகை கொள்ளையடித்த பணிப்பெண் தனது கணவருடன் கைது செய்யப்பட்டார்.
திருவேங்கடத்தில் தொழில் அதிபர் வீட் டில் 53 பவுன் நகை கொள்ளையடித்த பணிப்பெண் தனது கணவருடன் கைது செய்யப்பட்டார்.

திருவேங்கடத்தில் தொழில் அதிபர் வீட் டில் 53 பவுன் நகை கொள்ளையடித்த பணிப்பெண் தனது கணவருடன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி : திருவேங்கடம் என்.ஜி.ஓ.காலனியில் வசித்து வருபவர் ரகுபதி (61). தொழில் அதிப ரான இவர் திருவேங்கடத்தில் மெடிக்கல் மற்றும் கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் ரகுபதியின் சொந்த ஊரான திருவேங்கடம் அடுத்துள்ள குண்டம்பட்டி காலனி தெருவை சேர்ந்த துளசி மணியின் மனைவி மகேஸ்வரி (43) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

இதனால் அவரது மேல் நம்பிக்கை வைத்து ரகுபதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது வீட்டில் உள்ள சாவிகளை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். நேற்று ரகுபதியின் மனைவி பீரோவை திறந்து நகைகள் சரியாக இருக்கிறதா? என்று பார்த்தார். அப்போது, அதில் இருந்த சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 53 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். நகை கொள்ளை போனது குறித்து ரகுபதி, மகேஸ்வரிடம் கேட்டார். ஆனால் அவர் நகையை எடுக்கவில்லை என்று கூறினார். இதையடுத்து திருவேங்கடம் போலீசில் ரகுபதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் சந்தேகத்தின் பேரில் மகேஸ்வரியிடம் விசாரித்தனர். பின்னர் அவர் தனது கணவர் துளசிமணியு டன் சேர்ந்து திட்டம் தீட்டி நகைகளைகொள்ளையடித்த தாக ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நகைகளை மகேஸ்வரி வீட்டில் இருந்து போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஸ்வரி, துளசிமணி ஆகியோரை கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்