தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ttd Assets And Other Trending News For National And World On September 25

TTD assets: ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.85,705 கோடி - முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil

Sep 25, 2022, 05:43 PM IST

திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.85,705 கோடி, பழமையான கப்பல் கண்டுபிடிப்பு உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.85,705 கோடி, பழமையான கப்பல் கண்டுபிடிப்பு உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.85,705 கோடி, பழமையான கப்பல் கண்டுபிடிப்பு உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியிடும் திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் வருகிற 30ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளாா்.

ட்ரெண்டிங் செய்திகள்

திண்ணை பள்ளியில் கல்வி.. தமிழ் எங்கள் மூச்சு.. தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்த உ.வே.சா..!

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

Manipur Violence: மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: குக்கி தீவிரவாதிகள் தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்

Body Of Fisherman: பாகிஸ்தானில் இறந்த இந்திய மீனவரின் உடல்.. ஒரு மாதத்துக்குப் பின் தாயகம் கொண்டுவரப்படுவதாக தகவல்!

உணவு பாதுகாப்பு, வளர்ச்சிக்கான தரவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளது என்று திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலியானார்கள்.

சண்டீகர் விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,777 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 23 பேர் உயிரிழந்தனர்.

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளாா்.

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூா் மாவட்டத்தில் வகுப்பில் படிக்கும் சக மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்டித்த பள்ளி முதல்வரை 10-ஆம் வகுப்பு மாணவா் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வா் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தனியார்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்காகத் தனியார் பேருந்தை நடுரோட்டில் நின்று நிறுத்தி அந்த பேருந்தில் அவர்களை அனுப்பி வைத்தார்.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் தொடர்பில் இருப்பதாக பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளது மேற்கு வங்காளத்தில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திடீரென அறிவித்துள்ளாா்.

ஈரானில் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது.

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகளை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் ஒரே நாளில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து 46 குழந்தைகள் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக நாசா அனுப்ப இருந்த ஆர்ட்மிஸ் ராக்கெட் ஏவுவது புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்கனவே 2 முறை விண்ணுக்கு செலுத்துவது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புயல் காரணமாக 3வது முறையாக தடைபட்டுள்ளது.

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. அதனை சமாளிப்பது நமது பொறுப்பாகும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இஸ்ரேல் கடலுக்கு அடியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான வணிகக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்