தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Tamil Live News Updates : Odisha Train Accident - Death Toll Continues To Rise - 233 Bodies Recovered
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்

Tamil Live News Updates: ஒடிசா ரயில் விபத்து - ஒரு தமிழர் கூட உயிரிழக்கவில்லை

Jun 03, 2023, 10:03 PM IST

இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்

Jun 03, 2023, 10:03 PM IST

விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது - மத்திய அரசு

புவனேஸ்வரில் இருந்து செல்லும் விமானங்களுக்கும், புவனேஸ்வரை நோக்கி செல்லும் விமானங்களுக்கும் விமான கட்டணத்தை உயர்த்தக் கூடாது என தனியார் விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவு

Jun 03, 2023, 09:00 PM IST

உயிரிழப்பு 288ஆக உயர்வு

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288ஆக உயர்வு 

Jun 03, 2023, 08:08 PM IST

’ஒடிசா ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு’ பாஜகவை விளாசும் ஆ.ராசா

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒடிசா ரயில் விபத்தை திமுகவோ முதலமைச்சரோ அரசியல் செய்ய விரும்பவில்லை. இந்திய வரலாற்றில் லால்பகதூர் சாஸ்திரி தொடங்கி லாலுபிரசாத், மம்தா பானர்ஜி உட்பட அனைவரும் தார்மீகரீதியாக பதவி விலகி உள்ளார்கள்.

மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே “நாங்கள் ரயில் விபத்து தடுப்பு அமைப்பு திக்காஸ் என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வந்தோம் ஆனால் அது எங்களுக்கு பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக ’கவாச்’ என்று மாற்றினீரக்ள் ஆனால் 70 ஆயிரம் கி.மீ நீளமுள்ள இந்திய ரயில்வே தண்டவாளத்தில் 1500 கி.மீக்கு மட்டுமே கவாச் கருவி பொறுத்தி உள்ளார்கள். இது ஒட்டுமொத்த ரயில் பாதையில் 2 சதவீதம் கூட இல்லை” என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டும்போது ரயில்வே அமைச்சர் ஊமையாக உள்ளார் என கூறி உள்ளார்.

Jun 03, 2023, 07:20 PM IST

ஒடிசா ரயில் விபத்து - ஒரு தமிழர் கூட உயிரிழக்கவில்லை

இதுவரை கிடைத்த தகவலின்படி தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என ஒடிசா சென்ற ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

ஒடிசா தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசிய பின் குமார் ஐஏஎஸ் இதனை தெரிவித்துள்ளார். பயணிகள் பட்டியலை வைத்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரேனும் விபத்தில் சிக்கி உள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டு பயணிகளின் முழுமையான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை என கும்கார் ஜெயந்த் தெரிவித்துள்ளார். மேலும் பயணிகள் பட்டியலை கொண்டு விவரங்களை சேகரித்து வருவதாகவும், ரயில் விபத்து தொடர்பாக இரண்டு குழுவாக பிரிந்து ஆய்வை நடத்தி வருவதாகவும் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

Jun 03, 2023, 06:58 PM IST

மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் - விஜயகாந்த்

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Jun 03, 2023, 06:54 PM IST

5 ரயில்கள் ரத்து

ஒடிசா ரயில் விபத்து காரணமாக 5 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • இன்று இரவு 11 மணிக்கு மங்களூரு - சந்திரகாச்சி செல்லும் விவேக் விரைவு ரயில்
  • நாளை காலை 7 மணிக்கு சென்னை - ஷாலிமர் செல்லும் கோரமண்டல் ரயில்
  • நாளை காலை 8.10 மணிக்கு சென்னை - சந்திரகாச்சி செல்லும் ஏ.சி. விரைவு ரயில்
  • வரும் 6ம் தேதி காலை 6.20 மணிக்கு கவுகாத்தி - பெங்களூரு செல்லும் வாராந்திர விரைவு ரயில்
  • வரும் 7ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு காமாக்யா - பெங்களூரு செல்லும் ஏ.சி. விரைவு ரயில்

Jun 03, 2023, 06:25 PM IST

பலி எண்ணிக்கை 288 ஆக உயர்வு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 747 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயங்களுடன் 56 பேர் சிகிச்சையில் உள்ளதாக இந்திய ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

Jun 03, 2023, 06:25 PM IST

தெற்கு ரயில்வே

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் வகையில் ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் அவர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Jun 03, 2023, 05:14 PM IST

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசா சென்றுள்ள தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போதைய நிலைமை குறித்து ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வர் கேட்டறிந்தார்.

Jun 03, 2023, 05:13 PM IST

பிரதமர் ஆறுதல்

ரயில் விபத்தில் காயமடைந்து ஒடிசாவின் பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Jun 03, 2023, 04:53 PM IST

நடிகர் யஷ் ட்வீட்

ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகளில் திரளாக வந்து உதவிய மக்களுக்கு நடிகர் யஷ் நன்றி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jun 03, 2023, 04:18 PM IST

ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடி, மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்

Jun 03, 2023, 04:01 PM IST

ஒடிசா விபத்து - பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

Jun 03, 2023, 03:45 PM IST

ஒடிசா ரயில் விபத்து

ஒடிசா ரயில் விபத்திற்கு தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

Jun 03, 2023, 03:34 PM IST

ஒடிசா ரயில் விபத்து குறித்து கமல்ஹாசன்!

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Jun 03, 2023, 03:21 PM IST

முதல்வர் முக்கிய ஆலோசனை!

ரயில் விபத்து.. மாலை 5 மணிக்கு முதல்வர் முக்கிய ஆலோசனை

Jun 03, 2023, 03:03 PM IST

ரயில் விபத்து - கவிஞர் வைரமுத்து வேதனை!

Jun 03, 2023, 02:49 PM IST

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

Jun 03, 2023, 02:10 PM IST

அமீரின் புதிய ஹோட்டலை திறந்து வைத்த இயக்குநர் வெற்றிமாறன் சூரி 

அமீரின் 4 AM ஹோட்டலை இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் சூரியும் திறந்து வைத்தனர். 

 

Jun 03, 2023, 01:59 PM IST

பலி எண்ணிக்கை 261 ஆக உயர்வு 

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 261ஆக உயர்வு தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் விபத்தில் காயம் அடைந்த 900க்கும் மேற்பட்டோர் 5 இடத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கோபால்பூர், காந்தபாரா, பாலசூர், பாத்ராக் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது 

 

 

Jun 03, 2023, 01:57 PM IST

சம்யுதாவிற்கு விஷ்ணுகாந்த் மீண்டும் பதிலடி!

Jun 03, 2023, 12:56 PM IST

ஒடிசா ரயில் விபத்து - இறந்தவர்கள் உடல் சிதைந்திருப்பதால் அடையாளம் காணுவதில் சிக்கல்

ஒடிசா ரயில் விபத்தில் இறந்த 238 பேரில் பலரது உடல்கள் உருக்குலைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பெட்டிகளின் அடியில் சிக்கி இறந்த சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

உடல்கள் சிதைத்திருப்பதால் இறந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Jun 03, 2023, 12:55 PM IST

கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் படத்துக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை

கோபாலபுர இல்லத்தில் உள்ள கலைஞர் திருவுருவப் படத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Jun 03, 2023, 12:12 PM IST

ஒடிசா ரயில் விபத்து - மீட்பு பணிகள் நிறைவு 

ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பாதையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.

Jun 03, 2023, 11:48 AM IST

ஒடிசா ரயில் விபத்து - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்

ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் புகைப்படங்கள் என் இதயத்தை நொறுக்கும் அளவு உள்ளது. இந்த விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். 

இந்த கடினமான தருணத்தில் இந்தியாவுக்கு கனடா துணை நிற்கிறது என்று கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டரூடோ டுவிட் செய்துள்ளார். 

Jun 03, 2023, 11:35 AM IST

ஒடிசா ரயில் விபத்து -  உயிரிழந்தவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரிந்தவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடையாளம் தெரியாதவர்கள் உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Jun 03, 2023, 11:01 AM IST

ஒடிசா ரயில் விபத்து - பாதிக்கப்பட்ட தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மருத்துவக் குழு ஒடிசா விரைந்துள்ளது 

Jun 03, 2023, 10:42 AM IST

ஒடிசா ரயில் விபத்து - தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்

Jun 03, 2023, 09:51 AM IST

ஒடிசா ரயில் விபத்து: பயணம் செய்த தமிழர்கள் எண்ணிக்கை வெளியானது!

கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்த நிலையில் 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லை. 53 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.14 பேர் காயமடைந்துள்ளனர். மீதமுள்ள 09 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Jun 03, 2023, 09:31 AM IST

சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னையில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Jun 03, 2023, 09:30 AM IST

தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம்

தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என வருவாய்த்துறை செயலர் தகவல்.

Jun 03, 2023, 09:14 AM IST

கள நிலவரம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை எழிலகத்தில் ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனாவிடம் காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Jun 03, 2023, 09:13 AM IST

ஒடிசா விபத்து -இபிஎஸ் இரங்கல்!

ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Jun 03, 2023, 09:03 AM IST

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 100வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Jun 03, 2023, 08:48 AM IST

சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில்  முதலமைச்சர் ஆய்வு!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு . மீட்பு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார் .

Jun 03, 2023, 08:41 AM IST

ஒடிசா ரயில் விபத்து – பலி 288ஆக உயர்வு

ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. இதில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Jun 03, 2023, 08:20 AM IST

தமிழகத்திலும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு 

ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Jun 03, 2023, 08:06 AM IST

மத்திய ரயில்வே அமைச்சர் ஆய்வு 

ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். 

Jun 03, 2023, 07:49 AM IST

காயமடைந்தவர் நிலை குறித்த தகவல்

ரயில் விபத்தில் இதுவரை 900க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து பாலசோர், மயூர்பஞ்ச், பத்ரக், ஜாஜ்பூர் கட்டாக் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 233 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. என்டிஆர்எஃப், ஓடிஆர்ஃப் மற்றும் தீயணைப்பு, காவல் துறை உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். 

Jun 03, 2023, 07:45 AM IST

சென்னை சென்ட்ரலில் உதவி மையம் 

ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணிகளுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Jun 03, 2023, 07:44 AM IST

ரத்ததானம் செய்ய குவிந்த மக்கள்

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாலசோரில் நேற்று இரவில் மட்டும் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் மாநிலத்தின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். 

Jun 03, 2023, 07:42 AM IST

பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து 

ஒடிசா ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.  

Jun 03, 2023, 07:23 AM IST

கலைஞர் நூற்றாண்டு விழ பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து காரணமாக வடசென்னையில் இன்று நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுக்கூட்டம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், வேறு ஒரு நாளில் மீண்டும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் திமுக அறிவித்துள்ளது. 

 

Jun 03, 2023, 07:19 AM IST

விசாரணைக்கு உத்தரவு 

ஒடிசா ரயில் விபத்து குறித்து தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.   

Jun 03, 2023, 07:15 AM IST

கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

ஒடிசா ரயில் விபத்து மீட்புப்பணிகள் தொடர்பாக, சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

Jun 03, 2023, 07:13 AM IST

ஒடிசாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில், இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Jun 03, 2023, 07:01 AM IST

இந்தியாவை புரட்டி போட்ட ஒடிசா ரயில் விபத்து

1999க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. தற்போது வரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1999ல் அசாமின் கைசால் பகுதியில் 2,500 பேர் பயணம் செய்த 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 285க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Jun 03, 2023, 06:58 AM IST

ஒடிசா ரயில் விபத்து - முதல்வர் ஆய்வு 

ஒடிசா ரயில் விபத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்னும் சற்று நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். 

Jun 03, 2023, 06:28 AM IST

கோரமண்டல ரயில் விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு

ஹவுரா – 033 – 26382217 

கரக்பூர் – 8972073925, 9332392339 

பாலசோர் – 8249591559, 7978418322 

ஷாலிமார் – 9903370746

சென்னை சென்ட்ரல் – 044 – 25330952, 044 – 25330953, 044 – 2535477  

Jun 03, 2023, 06:24 AM IST

கோர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு

ஒடிசா – கோரமண்டல் விரைவு ரயில், யஷ்வந்த்பூர் – ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்து பலி எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது. 207 பேர் இதுவரை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

    பகிர்வு கட்டுரை