தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  புதுச்சேரி கல்லூரி மாணவர் கோவாவில் மர்ம மரணம் - போலீஸார் விசாரணை

புதுச்சேரி கல்லூரி மாணவர் கோவாவில் மர்ம மரணம் - போலீஸார் விசாரணை

Karthikeyan S HT Tamil

Aug 17, 2022, 03:34 PM IST

புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரிஷ்வந்த் (21) என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து கோவா வந்திருக்கிறார். சில நாட்களாக அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றும் அவர் வழக்கம் போல இரவு நேர விருந்தில் கலந்து கொண்டு அதிக அளவு போதை பொருள் உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உடனே அவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில் போதை மருந்தை அதிகமாக உட்கொண்டதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறினர். 

இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகே இதன் உண்மையான தகவல்கள் வெளிவரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டாபிக்ஸ்