Brazil Plane Crash : 62 பயணிகளின் உயிர்களை காவு வாங்கிய விமான விபத்து.. அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து விபத்து!
Aug 10, 2024, 08:50 AM IST
Brazil Plane Crash : விமானம் விபத்துக்குள்ளாகும் முன் கீழ்நோக்கி சுழல்வதைக் காட்டியது. நெதர்லாந்தைச் சேர்ந்த பிஎன்ஓ நியூஸ் என்ற செய்தி நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது.
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள வின்ஹெடோ நகரில் வெள்ளிக்கிழமை விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 62 பேரும் உயிரிழந்தனர்.
வோபாஸ் லின்ஹாஸ் ஏரியாஸ் இயக்கும் ஏடிஆர் -72 விமானம், பரனா மாநிலத்தில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோவில் உள்ள குவாருல்ஹோஸுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனமான ஜி 1 தெரிவித்துள்ளது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்த விமானம்
சாவோ பாலோவில் இருந்து வடமேற்கே 80 கி.மீ (50 மைல்) தொலைவில் உள்ள வின்ஹெடோ என்ற நகரில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்த தருணத்தை படம்பிடித்தன, அதைத் தொடர்ந்து விமானம் விழுந்த இடத்தில் இருந்து ஒரு பெரிய கரும்புகை எழுந்தது.
வின்ஹெடோவுக்கு அருகிலுள்ள வாலின்ஹோஸில் உள்ள அதிகாரிகள், விபத்தில் இருந்து யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்தனர். அருகிலுள்ள காண்டோமினியம் வளாகத்தில் ஒரு வீடு மட்டுமே சேதமடைந்தது, ஆனால் குடியிருப்பாளர்கள் யாரும் காயமடையவில்லை.
விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது
உள்ளூர் தொலைக்காட்சி நிலையமான குளோபோநியூஸில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள், விமானம் விபத்துக்குள்ளாகும் முன் கீழ்நோக்கி சுழல்வதைக் காட்டியது. நெதர்லாந்தைச் சேர்ந்த பிஎன்ஓ நியூஸ் என்ற செய்தி நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது.
பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்தில் இருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவதாக உள்ளது.
பிஎன்ஓ நியூஸ் வெளியிட்ட செய்திகளின் படி, 62 பேர் சென்ற வியோபாஸ் 2283 என்ற விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது. தீப்பிழம்பாக அந்த இடமே மாறி உள்ளது. யாரும் உயிருடன் இல்லை. ஏனெனில் விமானம் வந்து விழுந்த வேகத்தில் வெடித்து சிதறியது.
மௌன அஞ்சலி
விபத்துக்குப் பிறகு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, "நான் மிகவும் மோசமான செய்தியை சுமப்பவனாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும்"சாவ் பாலோவில் உள்ள வின்ஹெடோ நகரில் 58 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது, அனைவரும் இறந்ததாகத் தெரிகிறது" என்று அவர் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுவில் பட்டியலிடப்படாத விமான நிறுவனம், பிஎஸ்-விபிபி என பதிவு செய்யப்பட்ட விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என்பது குறித்த கூடுதல் விவரங்களை வழங்க முடியாது என்று கூறியது.
மீட்பு பணியில் தீயணைப்புத் துறை
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, சாவோ பாலோவின் மாநில தீயணைப்பு படை ஏழு குழுக்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியது. சாவ் பாலோவின் தீயணைப்புத் துறை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதாகவும், விமானத்தின் உடற்பகுதியின் எச்சங்களாகத் தோன்றியவற்றிலிருந்து புகை வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
FlightRadar24 விமானத்தை ATR 72-500 டர்போப்ராப் என்று அடையாளம் கண்டது. இந்த விமானத்தை தயாரிக்கும் ஏடிஆர் நிறுவனம், ஏர்பஸ் மற்றும் இத்தாலிய விண்வெளி குழுமமான லியோனார்டோ ஆகியோருக்கு இணை உரிமையாளராக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்