Tamil Top 10 News : பயணிகள் விமானம் விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..வயநாடு நிலச்சரிவு என இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News : பயணிகள் விமானம் விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..வயநாடு நிலச்சரிவு என இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil Top 10 News : பயணிகள் விமானம் விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..வயநாடு நிலச்சரிவு என இன்றைய முக்கிய செய்திகள்!

Divya Sekar HT Tamil
Aug 10, 2024 08:53 AM IST

Morning Top 10 News : பயணிகள் விமானம் விபத்து, பள்ளிகளுக்கு விடுமுறை, வயநாடு நிலச்சரிவு என நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

பயணிகள் விமானம் விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..வயநாடு நிலச்சரிவு என இன்றைய முக்கிய செய்திகள்!
பயணிகள் விமானம் விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..வயநாடு நிலச்சரிவு என இன்றைய முக்கிய செய்திகள்!

வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்

Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக் 2024ன் 14வது நாளில் இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை கைப்பற்றியது. ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் வெண்கலப் பதக்கப் போட்டியில், இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் பதக்கம் வென்று அசத்தினார்.

வயநாடு நிலச்சரிவு- இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு!

Wayanad Landslides : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்கிறார். நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 12 நாட்களுக்குப் பிறகு வயநாடு செல்கிறார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 12 நாள் ஆகிறது.

தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து

Tambaram : சென்னையை அடுத்த தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 14-ம் தேதி வரையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 63 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதி நேரமாகவும், சில ரயில்கள் முழுவதுமாகவும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

School Leave Puducherry : புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்தது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று

Petrol Price : பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2 மணி நேரத்தில் 15 செ.மீ. மழை - புதுச்சேரியில் கொட்டித் தீர்த்த கனமழை!

Puducherry : புதுச்சேரி புறநகர் பகுதிகளில் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு முதல் தொடர்ந்ததால் பொதுமக்கள் சிரமம். கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது கல்வித்துறை.

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

Weather Update : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

Salem : மருத்துவமனை ஊழியர்போல நடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் சிசுவைக் கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று குழந்தை மீட்க்கப்பட்டுள்ளது. காரிப்பட்டியை சேர்ந்த வினோதினி என்ற பெண் தனக்கு குழந்தை இல்லை என்பதால் குழந்தையை கடத்தி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.