தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நாடு முழுவதும் புதிதாக 16,103 பேருக்கு கொரோனா தொற்று: 31 பேர் பலி

நாடு முழுவதும் புதிதாக 16,103 பேருக்கு கொரோனா தொற்று: 31 பேர் பலி

Karthikeyan S HT Tamil

Jul 03, 2022, 12:17 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

புதுதில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,103 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 103 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,02,429 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் தற்போது 1,11,711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 52,5199 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை 1,97,95,72,963 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,10,652 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, தில்லி மற்றும் கர்நாடகாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்