தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: ‘பணத்தை அச்சடித்து எல்லோருக்கும் கொடுக்கிற ஒரு ஐடியா இருக்கு’ என ராகுல் கூறினாரா?

Fact Check: ‘பணத்தை அச்சடித்து எல்லோருக்கும் கொடுக்கிற ஒரு ஐடியா இருக்கு’ என ராகுல் கூறினாரா?

News checker HT Tamil

May 22, 2024, 01:05 PM IST

google News
Rahul Gandhi: பணத்தை அச்சடித்து மக்கள் அனைவருக்கும் வழங்குவேன் என்று காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையா இல்லை தவறான தகவலா என நியூஸ் செக்கர் குழு 'ஃபேக்ட்செக்' செய்துள்ளது.
Rahul Gandhi: பணத்தை அச்சடித்து மக்கள் அனைவருக்கும் வழங்குவேன் என்று காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையா இல்லை தவறான தகவலா என நியூஸ் செக்கர் குழு 'ஃபேக்ட்செக்' செய்துள்ளது.

Rahul Gandhi: பணத்தை அச்சடித்து மக்கள் அனைவருக்கும் வழங்குவேன் என்று காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையா இல்லை தவறான தகவலா என நியூஸ் செக்கர் குழு 'ஃபேக்ட்செக்' செய்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பணத்தை அச்சடித்து எல்லோருக்கும் வழங்குவேன் என கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன. உண்மையில் அவர் அப்படி கூறினாரா என நியூஸ்செக்கர் செய்தி வலைத்தளம் தேடியுள்ளது. முடிவில் அவர் அவ்வாறு கூறவில்லை என்பதும் இது தவறான தகவல் என்பதையும் நியூஸ் செக்கர் செய்தி குழு கண்டறிந்துள்ளது.

கூற்று: “பணத்த அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுப்பேன்” – ராகுல் காந்தி

உண்மை: வைரலாகும் வீடியோவில் அவர் அப்படி பேசவில்லை.

பணத்தை அச்சடித்து மக்கள் அனைவருக்கும் வழங்குவேன் என்று காங்கிரஸ் எம்.பி.யான ராகும் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

”நாட்டின் பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையை சரிசெய்ய என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு..

அது என்னனா…..”பணத்த அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுக்கிறது” – இப்படிக்கு வடமாநில ஸ்டாலின்” என்று இந்த வீடியோ வைரலாகிறது.ஹஸப

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் ஆய்வு செய்தது.

Fact Check

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் நியூஸ் செக்கர் குழு ஈடுபட்டது.

வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது குறிப்பிட்ட வீடியோ ராகுல் காந்தி உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த மே 13ஆம் தேதியன்று காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற மகளிருக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி மாதாமாதம் பணம் வழங்குவோம். அதனை உபயோகித்து நீங்கள் பொருள் வாங்கும்போது நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்க நேரும். இதனால், வேலைவாய்ப்புகள் அதிகரித்து அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்” என்பதாகப் பேசியிருந்தார்.

இதனையே, தவறாக மொழிபெயர்த்து அவர் பணத்தை அச்சடித்து தருவதாகக் கூறியதாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் newschecker-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

முன்னதாக, டெல்லி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சீனாவின் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி பரப்புரையில் ஈடுபட்டார் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதன் உண்மைத் தன்மை குறித்து பூம் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.

ஹிமந்த பிஸ்வா ஷர்மாவின் எக்ஸ் தள பதிவை ’பூம்’ உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி, அஸ்ஸாம் முதலமைச்சரின் எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்ட போஸ்டிற்கு கிழே பலர் ராகுல் காந்தி பயன்படுத்திய அதே நிறத்திலான இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிலர் பரிசளித்துள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி