’ராகுல் காந்தியின் வயதை விட குறைவான சீட்டுகளைதே காங்கிரஸ் வெல்லும்!’ பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு!-congress will get fewer seats than the age of its rahul gandhi pm modi in bengal - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  ’ராகுல் காந்தியின் வயதை விட குறைவான சீட்டுகளைதே காங்கிரஸ் வெல்லும்!’ பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு!

’ராகுல் காந்தியின் வயதை விட குறைவான சீட்டுகளைதே காங்கிரஸ் வெல்லும்!’ பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு!

Kathiravan V HT Tamil
May 12, 2024 09:19 PM IST

”மேற்கு வங்கத்தில் கருத்து சுதந்திரம் இல்லை. இங்கு எதிர்க்கட்சிகள் மற்றும் குடிமக்களின் குரல்கள் அடங்கி நிற்கின்றன. யாராவது ஒரு கார்ட்டூனைப் பகிர்ந்தால் அல்லது சமூக ஊடகங்களில் நகைச்சுவையாக ஏதாவது இடுகையிட்டாலும், அவர் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்" குற்றம்சாட்டினார்”

’ராகுல் காந்தியின் வயதை விட குறைவான சீட்டுகளைதே காங்கிரஸ் வெல்லும்!’ பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு! (ANI)
’ராகுல் காந்தியின் வயதை விட குறைவான சீட்டுகளைதே காங்கிரஸ் வெல்லும்!’ பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு! (ANI)

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள சின்சுராவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 

நீங்கள் நிச்சயமாக பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியை 400 இடங்களை தாண்டச் செய்வீர்கள். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் அதன் ராகுல் காந்தியின் வயதை விட குறைவான இடங்களைப் பெறும்" என்று 53 வயதான ராகுல் காந்தியின் பெயரைக் ஷெர்ஷா (இளவரசர்) குறிப்பிட்டு பிரதமர் பேசினார். 

“சந்தேஷ்காலியில் என்ன நடக்கிறது என்பதை முழு நாடும் கவனித்து வருகிறது. முதலில் மாநில போலீசார் குற்றவாளிகளை பாதுகாத்தனர். இப்போது திரிணாமுல் காங்கிரஸ் ஒரு புதிய விளையாட்டைத் தொடங்கி உள்ளது. குற்றவாளியின் பெயர் ஷாஜகான் ஷேக் என்ற ஒரே காரணத்திற்காக திரிணாமுல் காங்கிரஸின் குண்டர்கள் சந்தேஷ்காலியில் பெண்களை மிரட்டுகிறார்கள். அவரது வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால் வாக்கு வங்கியை சமாதானப்படுத்தும் முயற்சியில், திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபடுகிறது” பிரதமர் மோடி குற்றம்சாட்டின்னார். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய மீம்ஸைப் பகிர்ந்த நெட்டிசன் ஒருவருக்கு கொல்கத்தா காவல்துறை விடுத்த எச்சரிக்கை குறித்து மம்தா பானர்ஜி நிர்வாகத்தை குற்றம்சாட்டி மோடி பேசினார். 

மேற்கு வங்கத்தில் கருத்து சுதந்திரம் இல்லை. இங்கு எதிர்க்கட்சிகள் மற்றும் குடிமக்களின் குரல்கள் அடங்கி நிற்கின்றன. யாராவது ஒரு கார்ட்டூனைப் பகிர்ந்தால் அல்லது சமூக ஊடகங்களில் நகைச்சுவையாக ஏதாவது இடுகையிட்டாலும், அவர் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்" குற்றம்சாட்டினார். 

வாரிசு அரசியல், ஊழல், காங்கிரஸ் மேற்கொள்ளும் திருப்திபடுத்தும் நடவடிக்கை, இடதுசாரி ஆட்சியின் அட்டூழியங்கள், அராஜகம் ஆகியவற்றை இணைத்தால் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் கிடைக்கும். திரிணாமுல் காங்கிரஸ் ஊழல்களை தனது முழு நேர தொழிலாக மாற்றியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லது இந்தியா கூட்டணியின் வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் ஊழல் அவர்களின் பொதுவான குணம். அவர்களில் பெரும்பாலோர் மறைமுகமான முறையில் மோசடிகளை செய்கிறார்கள். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு திறந்தவெளி தொழிற்சாலையை நடத்துகிறது என பிரதமர் மோடி கூறினார். 

ஆட்சேர்ப்பு ஊழல், நிலக்கரி கடத்தல் ஊழல் மற்றும் ரேஷன் விநியோக ஊழல் போன்ற பல ஊழல்கள் தொடர்பாக பல திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை மத்திய அமைப்புகள் கைது செய்துள்ளன. டி.எம்.சி தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியிடமும் கூட்டாட்சி அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மோடியை விளாசிய மம்தா பானர்ஜி 

வாஜ்பாய், மன்மோகன் சிங், ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா, ராஜீவ் காந்தி போன்ற பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், மோடியைப் போல இவ்வளவு அவதூறுகளை பரப்பும் பிரதமரை நான் பார்த்ததில்லை. 

பொய் சொல்வதில் அவருக்கு 100க்கு 120 மதிப்பெண்கள் கிடைக்கும். அவர் எப்போதும் என்னையும் திரிணாமுல் காங்கிரஸையும் திட்டுகிறார். பொய் சொல்லி இரண்டு முறை பிரதமரானார். பாஜக தலைவர்கள் மிகப்பெரிய திருடர்களின் தலைவர்கள். என ஹவுராவில் உள்ள உலுபெரியாவில் நடந்த பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி கூறினார். 

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.