HBD SANA : ‘கண்டா வரச்சொல்லுங்க.. ஆடி போனா ஆவணி..’ தனித்துவமான இசையால் மக்கள் மனதை வெற்ற இசை நாயகன் சந்தோஷ் நாராயணன்!
HBD Santhosh Narayanan : தனித்துவமான இசையால் மக்கள் மனதை வெற்ற இசை நாயகன் சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள் இன்று. இவரின் பெரும்பாலான பாடல்கள் இணையத்தில் கோடி பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

2012-ல் வெளியான இயக்குநர் பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி முதல் ஆசை ஒரு புல்வெளி அதில் ஆண் பெண் ஒரு பனித்துளி பாடல் வரை கொடுத்து அசத்தி இருப்பார். ஆட்டம் போட வைக்கும் வைப் பாடல்களும், மென்மையான பாடல்களும் கொடுத்து அசத்தி இருப்பார்.
பொறியியல் முடித்த பட்டதாரியான சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் பல இசையமைப்பாளர்களிடம் இசை பொறியாளராக பணியாற்றி உள்ளார். குரு திரைப்படத்தில் ஏஆர் ரகுமான் உடன் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு தனது இசை பயணத்தை தொடங்கி 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அனைத்து திரைப்படத்திலும் பெயர் சொல்லும்படியான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பாடல்களில் மேஜிக்
2012ஆம் ஆண்டு வெளியான கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான சூது கவ்வும், குக்கூ போன்ற படங்கள் அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றன. குறிப்பாக குக்கூ படம் வெற்றிக்கு சந்தோஷ் நாரயணன் இசைக்கு முக்கிய பங்கு உண்டு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மனதை வருடும் அளவுக்கு இருக்கும். படத்திற்கு ஏற்றவாறு அற்புதமாக இசையமைத்து இருப்பார் சந்தோஷ் நாராயணன்.
