Union Budget 2024: ‘பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது’ - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Union Budget 2024: இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Union Budget 2024: இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், இன்று(பிப்ரவரி 1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிதியமைச்சராக அவரது ஆறாவது பட்ஜெட்டாகவும், பிரமர் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் கடைசி பட்ஜெட்டாகவும் திகழ்கிறது. இந்த பட்ஜெட்டை வெளியிடுவதற்கு முன்பு நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் பாரம்பரிய மரபு இருக்கிறது. அதன்படி, நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பு அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை இன்று சந்தித்தார்.
அதன்பின் சரியாக 11 மணிக்கு, இடைக்கால பட்ஜெட்டை வாசிக்கத்தொடங்கினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அவையாவன, '' 2014-ல் மோடி பிரதமராக பதவியேற்கும்போது பொருளாதாரத்தில் இந்தியா பின் தங்கி இருந்தது. 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. சமூக நீதிக்காகப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நீதி என்பது முன்புவெறும் அரசியல் முழக்கமாக இருந்தது; அதனை பாஜக அரசு நிறைவேற்றிக் காட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் வறுமை நீக்கப்பட்டுள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் விவசாயிகளின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 11.8 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் அரசின் மானியம் நேரடியாக செலுத்தப்படுகிறது. 4 பிரிவினரின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் முக்கிய குறிக்கோளாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர் கல்வி பெறுவது 28 விழுக்காடு அதிகரித்துள்ளது. பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோருக்கு ரூ.30 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி மூலமாக ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற நிலை எட்டப்பட்டுள்ளது. அனைத்து உட்கட்டமைப்புகளும் வரலாறு காணாத வேகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.
7 ஐஐடி மற்றும் ஐஐஎம்கள் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். மத்திய அரசின் திட்டங்களால் அனைத்து மாநிலங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்குகின்றன. மத்திய கிழக்கு தொழில் பெருமிதத்தட திட்டம் வரலாற்றில் மைல்கல்லாக அமையும்'' என்றார்.
முன்னதாக, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, சில மணி நேரங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் நீலம் மற்றும் கிரீம் நிற டஸ்ஸர் சேலையை அணிந்திருந்தார்.இது முழுக்க முழுக்க கையால் நெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்-ஒயிட் அல்லது கிரீம் நிறம் என்பது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிடித்த கலர் ஆகும். ஏனெனில், அவர் அடிக்கடி இந்த நிறத்தை அணிவதைக் காணலாம். 2021ஆம் ஆண்டின் சில தினங்களில், சிஹாராமன் சிவப்பு மற்றும் வெள்ளை போச்சம்பள்ளி சேலையை அணிந்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9