தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  புழக்கத்தில் ரூ.130 கோடி டிஜிட்டல் ரூபாய்-நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புழக்கத்தில் ரூ.130 கோடி டிஜிட்டல் ரூபாய்-நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Manigandan K T HT Tamil

Mar 13, 2023, 04:12 PM IST

Finance Minister Nirmala Sitharaman: "பிப்ரவரி 28, 2023 நிலவரப்படி, மொத்த டிஜிட்டல் ரூபாய் சில்லறை விற்பனையில் ரூ.4.14 கோடியும், மொத்த விற்பனையில் ரூ.126.27 கோடியும் புழக்கத்தில் உள்ளது." (PTI)
Finance Minister Nirmala Sitharaman: "பிப்ரவரி 28, 2023 நிலவரப்படி, மொத்த டிஜிட்டல் ரூபாய் சில்லறை விற்பனையில் ரூ.4.14 கோடியும், மொத்த விற்பனையில் ரூ.126.27 கோடியும் புழக்கத்தில் உள்ளது."

Finance Minister Nirmala Sitharaman: "பிப்ரவரி 28, 2023 நிலவரப்படி, மொத்த டிஜிட்டல் ரூபாய் சில்லறை விற்பனையில் ரூ.4.14 கோடியும், மொத்த விற்பனையில் ரூ.126.27 கோடியும் புழக்கத்தில் உள்ளது."

நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் ரூ.130 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் ரூபாய் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

இதுகுறித்து மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நவம்பர் 1, 2022 அன்று மொத்த விற்பனைப் பிரிவில் (e -W) டிஜிட்டல் ரூபாயிலும், சில்லறைப் பிரிவில் (e -R) டிசம்பர் 1, 2022 அன்றும் டிஜிட்டல் ரூபாயை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி ஆகியவை டிஜிட்டல் ரூபாய் மொத்த விற்பனையில் பங்கேற்று வருகின்றன.

பிப்ரவரி 28, 2023 நிலவரப்படி, மொத்த டிஜிட்டல் ரூபாய் சில்லறை விற்பனையில் ரூ.4.14 கோடியும், மொத்த விற்பனையில் ரூ.126.27 கோடியும் புழக்கத்தில் உள்ளது.

சோதனையின்போது பல்வேறு பயன்பாடுகள், தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

டாபிக்ஸ்