தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chandrababu Naidu: ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடுவை தேர்வு செய்த என்டிஏ எம்எல்ஏக்கள்

Chandrababu Naidu: ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடுவை தேர்வு செய்த என்டிஏ எம்எல்ஏக்கள்

Manigandan K T HT Tamil

Jun 11, 2024, 12:30 PM IST

google News
Andhra Pradesh new CM: ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடுவை என்டிஏ எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராகவும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் கே.அச்சன் நாயுடு தெரிவித்தார். (PTI)
Andhra Pradesh new CM: ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடுவை என்டிஏ எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராகவும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் கே.அச்சன் நாயுடு தெரிவித்தார்.

Andhra Pradesh new CM: ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடுவை என்டிஏ எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராகவும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் கே.அச்சன் நாயுடு தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடுவை அவரது தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) கூட்டணிக் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் ஜன சேனாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் செவ்வாயன்று தேர்வு செய்தனர்.

"ஆந்திராவின் வரவிருக்கும் என்டிஏ அரசாங்கத்தின் முதல்வராக நான் வருவதற்கு பாஜக, ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்" என்று நாயுடு கூறினார்.

முன்னதாக காலை, தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் கே.அச்சன் நாயுடு தெரிவித்தார்.

முன்னதாக, புதிதாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

கேபினட் அமைச்சர்கள் பட்டியல்:-

உள்துறை துறை- அமித் ஷா

பாதுகாப்பு துறை - ராஜ்நாத் சிங்

வெளியுறவு துறை- டாக்டர் எஸ் ஜெய்சங்கர்

நிதித்துறை - நிர்மலா சீதாராமன்

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு - சிவராஜ் சிங் சவுகான்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை - நிதின் கட்கரி

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சாரம் மற்றும் புதிய ஆற்றல்கள் துறை - மனோகர் லால் கட்டார்

வர்த்தக துறை - பியூஷ் கோயல்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை- ஹர்தீப் சிங் பூரி

ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை- அஷ்வினி வைஷ்ணவ்

கல்வி துறை

கல்வி துறை - தர்மேந்திர பிரதான்

சுகாதார துறை - ஜேபி நட்டா

தொழிலாளர் மற்றும் விளையாட்டு துறை- மன்சுக் மாண்டவியா

சுற்றுச்சூழல் துறை - பூபேந்திர யாதவ்

விமான போக்குவரத்துத்துறை - ராம் மோகன் நாயுடு

பாராளுமன்ற விவகாரங்கள் துறை - கிரண் ரிஜிஜு

குறு,சிறு மற்றும்நடுத்தர தொழில்கள் துறை - ஜிதன் ராம் மஞ்சி

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை - சர்பானந்தா சோனோவால்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை - சிராக் பாஸ்வான்

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை, தொலைத்தொடர்பு துறை- ஜோதிராதித்ய சிந்தியா

பஞ்சாயத்து ராஜ். மீன்வளம். கால்நடை வளர்ப்பு - லல்லன் சிங்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் - சர்பானந்தா சோனோவால்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் - வீரேந்திர குமார்

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - பிரஹலாத் ஜோஷி

பழங்குடியினர் விவகாரங்கள் - ஜுவல் ஓரம்

ஜவுளித்துறை - கிரிராஜ் சிங்

ரயில்வே, தகவல் ஒலிபரப்புத்துறை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐ.டி - அஸ்வினி வைஷ்ணவ்

கலாச்சாரம் மற்றும் சுற்றுலா - கஜேந்திர சிங் ஷெகாவத்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு - அன்னபூர்ணா தேவி

நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் - ஜி கிஷன் ரெட்டி

உணவு பதப்படுத்தும் தொழில்கள்- சிராக் பாஸ்வான்

ஜல் சக்தி- சிஆர் பாட்டீல்

டாபிக்ஸ்

அடுத்த செய்தி