Job Opportunities : சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்; தொழில் வளர்ச்சி அலுவலர் வேலை - 2 விவரங்கள்
Job Opportunities : கோவை மாவட்டம், கரியம்பாளையம் மகளிர் வாழ்வாதார மையத்தில் காலியாக உள்ள தொழில்சார் வளர்ச்சி அலுவலர், தொழில் சார் நிதி அலுவலர் பணியிடங்களுக்கு ஜூலை 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
ஒட்டுமொத்த பணியிடம் - 16
விண்ணப்பம் செய்ய வேண்டிய கடைசி நாள் – 02.08.2023
விண்ணப்பக் கட்டணம் - இல்லை
இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்த முழுமையான தகவல்களுக்கு www.cpcl.co.in/company/people/careers என்ற அதிகாரப்பூர்வை இணையதளத்தை பார்க்கவேண்டும்.
தொழில்சார் வளர்ச்சி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டம், கரியம்பாளையம் மகளிர் வாழ்வாதார மையத்தில் காலியாக உள்ள தொழில்சார் வளர்ச்சி அலுவலர், தொழில் சார் நிதி அலுவலர் பணியிடங்களுக்கு ஜூலை 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் கிராந்திகுமார்பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது –
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படும் கரியம்பாளையம் மகளிர் வாழ்வாதார மையத்தில் காலியாக உள்ள தொழில்சார் வளர்ச்சி அலுவலர், தொழில்சார் நிதி அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருக்கவேண்டும். ஊரகத் தொழில்கள், தொழில்கள் மேலாண்மை மற்றும் நிதி சேவைகள் குறித்த அனுபவம் இருத்தல் வேண்டும். தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும். மாதந்தோறும் தொகுப்பூ தியமாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். பெண்கள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்துப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும்.
விண்ணப்பங்களை உதவி இயக்குநர், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, 2வது தளம், பூமாலை வணிக வளாகம், கோனியம்மன் கோயில் எதிரில், பெரியகடைவீதி, கோவை- 1 என்ற முகவரிக்கு ஜூலை 30ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0422- 2300633, 93852-99734, 97881 - 74847 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாண்டு பி.எட். படிக்க விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலை நிலைக் கல்வி மூலம் வழங்கப்படும் 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கான விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ), பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் பி.எட். படிப்புக்கு 500 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
விருப்பமுள்ள பட்டதாரிகள் www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nom.idebedu@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 80157 58308 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்