HT Yatra: நந்தியை களவாடிய திருடர்கள்.. காட்டிக் கொடுத்த கால்நடைகள்.. கண்டுபிடித்த பொதுமக்கள்.. பசுபதீஸ்வரராக மாறிய சிவன்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: நந்தியை களவாடிய திருடர்கள்.. காட்டிக் கொடுத்த கால்நடைகள்.. கண்டுபிடித்த பொதுமக்கள்.. பசுபதீஸ்வரராக மாறிய சிவன்

HT Yatra: நந்தியை களவாடிய திருடர்கள்.. காட்டிக் கொடுத்த கால்நடைகள்.. கண்டுபிடித்த பொதுமக்கள்.. பசுபதீஸ்வரராக மாறிய சிவன்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2024 05:40 AM IST

நந்தியம் பெருமானை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கக்கூடிய ஒரு சில கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருதூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கி வருகிறது.

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

அந்த அளவிற்கு மிகவும் தொன்மையான கோயில்கள் நமது நாட்டில் இருந்த வருகின்றன. உருவமற்ற லிங்க வடிவில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்து வருகிறார். அரசர்களுக்கு பிரதான கடவுளாக சிவபெருமான் அப்போது விளங்கி வந்துள்ளார்.

அவர்கள் கட்டிய எத்தனையோ கோயில்கள் இன்று வரை அசைக்க முடியாமல் இருந்து வருகின்றன. பல்வேறு சிறப்புகளைப் பெற்று எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இறந்து வருகிறது. சிவபெருமானோடு இருக்கக்கூடிய அனைவருக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. அதில் நந்தியம் பெருமானுக்கு தனி இடம் உண்டு.

அந்த வகையில் நந்தியம் பெருமானை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கக்கூடிய ஒரு சில கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருதூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கி வருகிறது.

தல சிறப்பு

 

நந்திக்கு சிறப்பு மிகுந்த தளமாக இது விளங்கி வருகிறது பிரதோஷ நாட்களில் இங்கு வெகு விமர்சையாக வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் இங்கு நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுக்கின்றார். இங்கு இருக்கக்கூடிய நந்தி தேவர் மற்றும் இறைவனை வணங்குவது மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

தம்பதியாக வாழக்கூடியவர்கள் சில சிக்கல்களால் விலகி வாழ்கின்றனர். அவர்கள் இந்த திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் விரைவில் இணைந்து விடுவார்கள் என்பது அதிகமாக உள்ளது. அதேசமயம் மாங்கல்யத்தை பலப்படுத்தும் சக்தி இங்கு இருக்கக்கூடிய நந்தியம்பெருமானுக்கு உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தல வரலாறு

 

தற்போது கோயில் இருக்கக்கூடிய இடத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு மருத மரங்கள் அதிகமாக நிறைந்து காணப்பட்டுள்ளன. இந்த இடம் மருதபுரி பட்டினம் என அழைக்கப்பட்டுள்ளது. தற்போது அதுவே மறுவி மருதூர் என அழைக்கப்படுகிறது. இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் விஸ்வேஸ்வர நாயகர் என அழைக்கப்படுகிறார். சுயம்புலிங்கமாக இருக்கக்கூடிய இவருக்கு முன்பு நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருக்கக்கூடிய நந்தி தேவரை சில திருடர்கள் திருடி சென்றனர். அப்போது அந்த சிலையில் இருந்து அசரீரியால் அம்மா என ஒரு குரல் ஒலித்துள்ளது. இதனைக் கேட்ட அருகில் இருந்த மாடுகள் அம்மா, அம்மா என முரண்டு பிடித்து அம்மா அம்மா என கத்தி உள்ளன.

இந்த சத்தத்தைக் கேட்டு ஊர் மக்கள் விழித்து எழுந்துள்ளனர். கால்நடைகளை கட்டுப்படுத்த முடியாத பொதுமக்கள் இறைவனிடம் முறையிட கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கே சென்று பார்த்தபோது அங்கே நந்தியம் பெருமானை காணவில்லை. மாடுகள் கத்திய சத்தத்தில் மிரண்டு போன திருடர்கள் நந்தியம்பெருமானை பதுங்கியிருந்த இடத்தில் வைத்துவிட்டு ஓடி சென்று விட்டனர்.

அதற்குப் பிறகு நந்தி சிலை இருந்த இடத்தை பொதுமக்கள் கண்டுபிடித்து மீண்டும் அதை கோயிலுக்கு வந்து வைத்தனர். அதற்காக தனி மண்டபமும் கட்டினர். அதற்குப் பிறகு ஊரிலிருந்த கால்நடைகள் அனைத்தும் சாதாரணமாக மாறி அசைபோட தொடங்கியுள்ளன. நந்தி தேவரை திருடி சென்றதை கால்நடைகள் மூலம் இறைவன் அறிவுறுத்தியதை நினைத்து மக்கள் ஆச்சரியத்திற்கு உள்ளானார்கள். இதன் மகிமையை உணர்ந்த பொதுமக்கள் சிவபெருமானுக்கு பசுபதீஸ்வரர் என திருநாமம் சூட்டில் இன்று வரை வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதூர் என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner