Midhili: மிதிலி புயல் எதிரொலி: வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்
சூறாவளி புயல் வங்கதேச கடற்கரையை கடக்கும் முன்பு சுந்தவரவனக்காடுகளைக் கடந்து செல்லும் என்று வானிலை அறிவிப்பு மையம் கூறியது.
திரிபுரா மற்றும் பங்களாதேஷை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மிதிலி புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து இன்று காலை வலுவிழந்தது.
மேலும், அடுத்த ஆறு மணி நேரத்தில் தெற்கு அஸ்ஸாம் மற்றும் அதை ஒட்டிய மிசோரம், திரிபுராவை ஒட்டிய வடகிழக்குப் பகுதிகளில் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. சூறாவளி புயல் வங்கதேச கடற்கரையை கடக்கும் முன்பு, சுந்தரவனக் காடுகளை கடந்து செல்லும் என்று வானிலைத்துறை முன்பு கூறியது.
"மிதிலி" புயல் திரிபுரா மற்றும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள 50 கி.மீ. தொலைவிலும் திரிபுராவின் தலைநகர் அகர்தலாவின் 60 கி.மீ தொலைவிலும் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது" என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
'மிதிலி' புயல் குறித்த அப்டேட்கள்:
- வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோரம், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 17ல் புயலாக வலுப்பெற்றது. இந்திய வானிலை ஆய்வுமையத்தின் கருத்தின்படி, வானிலை நிலைமைகள் இன்றும் தொடரக்கூடும்.
- மிசோரம் மாநிலத்தின் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், மழையினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை உடன் கூடிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- இந்நிலையில், திரிபுராவின் நான்கு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- ஐஸ்வால் மாவட்டத்தில் நவம்பர் 17 முதல் 18 காலை வரை 51 மிமீ மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. பிற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது - சம்பையில் 52 மில்லி மீட்டரும், கோலாசிப் 58 மில்லி மீட்டரும், லாங்ட்லாயில் 52 மில்லி மீட்டரும் மற்றும் மாமிட் 56 மில்லி மீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது. நவம்பர் 16 மாலை முதல் திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் 87 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 'மிதிலி' என்ற பெயர் மாலத்தீவினால் வழங்கப்பட்டது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா சூறாவளிகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் சுழற்சி முறையில் புயல்களின் பெயர்களை வரிசையாக கொடுக்கின்றன. இந்த முறை உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (ESCAP) உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.