தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Andhra Pradesh Election Result: சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் தட்டி தூக்கிய தெலுங்கு தேசம் கூட்டணி!

Andhra Pradesh Election Result: சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் தட்டி தூக்கிய தெலுங்கு தேசம் கூட்டணி!

Jun 04, 2024 08:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 04, 2024 08:40 PM , IST

  • Andhra Pradesh Election Result: ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலின் முடிவும் வெளியாகியுள்ளது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் தனிப்பெருபான்மை பெற்றுள்ளது

ஆந்திர பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் தனிப்பொருபான்மை பெற்றிருக்கும் நிலையில் மீண்டும் அங்கு ஆட்சியை அமைக்கிறது. இந்த சூழ்நிலையில் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

(1 / 7)

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 155 கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதில் தெலுங்கு தேசம் 117, பாஜக 6 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கூட்டணியான தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் பவன் கல்யாண் கட்சியான ஜன சேனா 15 தொகுதிகள் முன்னிலையில் இருக்கின்றன

(2 / 7)

ஆந்திராவில் ஆளும் கட்சியாக இருந்து வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 23 தொகுதிகளில் முன்னிலை பெற்று கடும் சரிவை சந்தித்துள்ளது

(3 / 7)

ஆந்திராவில் இந்த முறை தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி என மும்முனை போட்டி நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது

(4 / 7)

சட்டப்பேரவை தேர்தலை போல் நாடாளுமன்ற தேர்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 25 தொகுதிகளில், தெலுங்கு தேசம் கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது

(5 / 7)

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10, பவன் கல்யாண் 21 தொகுதிகளில் போட்டியிட்டது

(6 / 7)

சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 159, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா 7 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்