உங்கள் குழந்தைதான் உங்கள் வாழ்வின் ஒளி! யூ ஆர் மை சன்ஷைன் என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள் இதோ!
Dec 01, 2024, 11:33 AM IST
உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற அழகிய பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட விரும்புகிறீர்கள். அவர்கள் தான் உங்கள் வாழ்வின் ஒளி, உங்களின் சன்ஷைன் என்றால், அந்த அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள். இதோ உங்கள் வாழ்வின் ஒளி, இதம் மற்றும் சூரிய உதயமானவர்களின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
சைரஸ்
இந்தப்பெயர் பர்சியப் பெயராகும். இதற்கு சூரியன் மறறும் ஒளி என்று பொருள். இதமான, பளபளக்கும் ஒளி நிறைந்த என எண்ணற்ற அர்த்தங்களை இந்தப்பெயர் தருகிறது. இது ஆற்றல் மற்றும் பலத்தைக் குறிக்கும்.
அன்சுல்
சூரியஒளி, பளபளப்பான, சூரியனின் முதல் ஒளி என்ற அர்த்தங்கள் நிறைந்த இந்து பெயர் இது.
ஏலியானா
சூரியனின் பிரகாசமான ஒளியுடன் பிறந்த பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர் மிகவும் ஏற்றது. இந்தப்பெயரின் பிறப்பிடம் லத்தின் மற்றும் ரோம் ஆகும். இதற்கு சூரியன் என்று பொருள். இந்தப்பெயரை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு வளம்பெற உதவுங்கள்.
சன்னி
சன்னி என்ற வார்த்தை சன் அதாவது சூரியன் என்பதில் இருந்து வந்தது. இது பிரகாசமா, ஒளி மற்றும் நேர்மறையான போன்ற அர்த்தங்களைக் கொண்டது.
ஹீலியா
ஹீலியா என்பது சூரியன் என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து தோன்றிய பெயர். இதற்கு அழகான, இயற்கையில் இருந்த பெறப்பட்ட என்று பொருள்.
ரேனா
ரேனா என்றால் அரசி என்று பொருள். ரே என்றால் சூரிய ஒளி என்ற அர்த்தத்தையும் தரும்.
சொலானா
சொலானா என்றால் இது சூரிய ஒளி, பிரகாசம், தெளிவு மற்றும் நம்பிக்கை என்பதன் அடையாளம் ஆகும். இது உங்களின் சிறப்பான தேர்வு.
அவிகா
அவிகா என்றால் மற்றவர்களை கவர்ந்திழுக்கக் கூடிய நபர் என்று பொருள். கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளித்தோற்றம் கொண்ட நபர் என்பது இதற்கு பொருள். இதற்கு முழு ஆற்றல் மற்றும் ஒளி என்று பொருள்.
நூர்
நூர் என்ற பெயர் பல்வேறு கலாச்சாரங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயராகும். இது குறிப்பாக அரபி நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தெய்வீக ஒளி, ஒளிவீசக்கூடிய என்று பொருள்.
சூர்யா
சூர்யா என்றால் சூரியன் என்று பொருள். இது இந்து மற்றும் புத்த மத நூல்களில் இடம் பெற்றுள்ள பெயராகும். சூர்யா என்ற பெயரை வைத்தால் உங்கள் குழந்தைகளில் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்