ஜான்வி கபூர் அப்படி பாராட்டித் தள்ளும் நபர் யார்? ஜான்விக்கும் அந்த நபருக்கும் அப்படி என்ன தொடர்பு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஜான்வி கபூர் அப்படி பாராட்டித் தள்ளும் நபர் யார்? ஜான்விக்கும் அந்த நபருக்கும் அப்படி என்ன தொடர்பு?

ஜான்வி கபூர் அப்படி பாராட்டித் தள்ளும் நபர் யார்? ஜான்விக்கும் அந்த நபருக்கும் அப்படி என்ன தொடர்பு?

Malavica Natarajan HT Tamil
Nov 29, 2024 09:01 AM IST

நடிகை ஜான்வி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு நபரை புகழ்ந்து பாராட்டி பேசியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

ஜான்வி கபூர் அப்படி பாராட்டித் தள்ளும் நபர் யார்?  ஜான்விக்கும் அந்த நபருக்கும் அப்படி என்ன தொடர்பு?
ஜான்வி கபூர் அப்படி பாராட்டித் தள்ளும் நபர் யார்? ஜான்விக்கும் அந்த நபருக்கும் அப்படி என்ன தொடர்பு?

இவர்கள் திருமணத்திற்கு முன், போனி கபூருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அவரது தாயைப் போல சினிமாவில் நடிக்க விரும்பி பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். பின், தேவாரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிாவிற்குள் நுழைந்தார்.

அர்ஜூன் கபூரை பாராட்டிய ஜான்வி

இந்நிலையில், சமீபத்தில் ஜான்வி கபூர் ஒருவரை புகழ்ந்து பாராட்டி பேசியுள்ளார். அது வேறு யாரும் அல்ல, ஜான்வியின் சகோதரர் அர்ஜூன் கபூர் தான். அர்ஜூன் கபூர், போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர். இவரும் பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

மலைக்கா அரோராவுடன் உறவு

சில காலமாக இவர், மலைக்கா அரோரா என்ற நடிகையுடன் உறவில் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தான் அந்த உறவில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், இவரும் ஜான்வி கபூரும் கலாட்டா மீடியாவிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அர்ஜூன் வாழ்வில் சவால்

ஜான்வி, தனது சகோதரர் அர்ஜூன் பற்றி பேசும் போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ஜூன் தனது வாழ்க்கையில் பல சவால்களையும் சிரமங்களையும் சந்தித்து வந்தார். அர்ஜூன் இந்த 2 வருடத்தை அவ்வளவு எளிமையாக கடந்து வரவில்லை. ஆனால், இப்போது, பல சிக்கல்களில் இருந்து வெளியேறி தைரியமாக முன்னேறி உள்ளார். அது பாராட்டக் கூடியது. நான் அவரைப் பற்றியும் அவரது பயணத்தைப் பற்றியும் பெருமிதம் கொள்கிறேன் எனக் கூறினார்.

எனது சகோதரிகள் துணையாக உள்ளனர்

இந்நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய அர்ஜூன் கபூர், எனது சகோதரிகள் ஜான்வி மற்றும் குஷி எனக்குப் பின்னால் துணையாக நிற்கின்றனர். ஜான்வி என் வாழ்வின் பலவீனமான பக்கத்தை பார்த்துள்ளார்.

தலை வெடிக்கச் செய்யும் விமர்சனங்கள்

ஒரு நடிகனாக இருப்பதால், என்னுடைய தேர்வுகளையும், என்னுடைய செயல்களையும், எனது தொழில் குறித்தும் பல கேள்விகள் கேட்கப்படுகிறது.

ஆனால், அவை ஒருசில நேரங்களில் என்ன செய்வது எனத் தெரியாமல் நம் தலையை வெடிக்க வைக்கும். நான் என் சகோதரிகளை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதைக் கண்டு சந்தோஷப்படுகிறேன்.

சினிமாவில் இருந்தாலும், எனது பயணம் நிரந்தரமானது அல்ல என்பதை உணர்ந்தேன். இந்த எதிர்மறையான எண்ணங்களே நம்மை ஒரு வழியாக்கிவிடும் எனக் கூறினார்.

மலைக்கா அரோராவுடன் அர்ஜூன் கபூர் உறவில் இருந்த போது அவர் ஏராளமான விமர்சனங்களைப் பெற்றார். அத்துடன் அவர் நடித்த சில படங்களும் சரியாக அமையாத நிலையில், ரசிகர்களின் அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளானார்.

சிங்கம் அகைன்

இந்நிலையில் தான், அர்ஜூன் கபூர் சிங்கம் அகைன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து சினிமா வாழ்க்கையில் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. டேஞ்சர் லங்கா என்ற இவரது கதாப்பாத்திரம் மக்களுக்கு பிடித்துப் போனது. இந்தப் படத்தில் அக்ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவித்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.