மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய பெர்சிமன் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 நன்மைகள்!
பெர்சிமன் பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

தமிழகத்தில் குன்னூர் மற்றும் கொடைக்கானல் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை பழங்கள் பெர்சிமன் பழங்கள். இவை சீமை பனிச்சை என்று தமிழில் கூறப்படுகிறது. இந்தப்பழங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடைக்கிறது. இவற்றின் நன்மைகள் என்ன என்று அறிந்துகொள்வோமா? பெர்சிமன் பழங்கள் சூப்பர் ஃபுட் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள், உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் கூறுகள் ஆகியவை உள்ளன. இது இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. இதை சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
பெர்சிமன் பழங்களில் உங்கள் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன. வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன. இது உங்களின் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்களின் கண் பார்வையையும் கூராக்குகிறது. இது உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது.
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
பெர்சிமன் பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும் அல்லது சர்க்கரையை நோய் வரவிடாமல் தடுக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.
