குளிர் காலத்துக்கு இதமான கேசர் மில்க்; பளபளக்கும் சருமம் பெற இரவு உறங்கச்செல்லும் முன் பருகுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குளிர் காலத்துக்கு இதமான கேசர் மில்க்; பளபளக்கும் சருமம் பெற இரவு உறங்கச்செல்லும் முன் பருகுங்கள்!

குளிர் காலத்துக்கு இதமான கேசர் மில்க்; பளபளக்கும் சருமம் பெற இரவு உறங்கச்செல்லும் முன் பருகுங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 21, 2024 04:53 PM IST

குளிர் காலத்துக்கு இதமான சருமத்தை பெறுவது எப்படி என்று பாருங்கள். அதற்கு உதவும் கேசர் மில்கை தயாரிப்பது எப்படி என்று பாருங்கள்.

குளிர் காலத்துக்கு இதமான கேசர் மில்க்; பளபளக்கும் சருமம் பெற இரவு உறங்கச்செல்லும் முன் பருகுங்கள்!
குளிர் காலத்துக்கு இதமான கேசர் மில்க்; பளபளக்கும் சருமம் பெற இரவு உறங்கச்செல்லும் முன் பருகுங்கள்!

இந்த பாலை தயாரிக்க உங்களுக்கு குங்குமப்பூ, பால், தேன், ஏலக்காய் ஆகியவை போதும்.

தேவையான பொருட்கள்

சூடான தண்ணீரில் குங்குமப்பூக்களை ஊறவைக்கவேண்டும். ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்தால் அதன் நிறம் மற்றும் வாசம் ஆகியவையும் அந்த தண்ணீரில் நிறைந்திருக்கும்.

செய்முறை

பாலை சூடாககிக்கொள்ளவேண்டும். அதில் ஊறவைத்த குங்குமப்பூக்களை சேர்க்கவேண்டும். அதில் உங்களுக்கு தேவையான அளவு தேனை சேர்க்கவேண்டும். தேனிலும் உங்கள் சருமத்துக்கு தேவையான எண்ணற்ற நற்குணங்கள் உள்ளது. கடைசியாக ஒரு சிட்டிகை ஏலக்காய்ப் பொடியை சேர்க்கவேண்டும். இது அந்த பாலுக்கு நல்ல சுவையையும், மணத்தையும் தரும். மேலும் ஏலக்காயிலும் எண்ணற்ற ஆரோக்கிய குணங்கள் உள்ளது.

இந்த பால் கலவையை சில நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்கவிட்டால், அது உங்களுக்கு அனைத்து உட்பொருட்களின் ருசியையும் அதில் சேர்க்கும். இதை வடிகட்டியும் பருகலாம் அல்லது அப்படியேவும் பருகலாம். இதை சில நிமிடங்கள் ஆறவைத்தால் உங்களுக்கு சுவையான பால் கிடைக்கும். இந்த கேசர் மில்கை நீங்கள் தினமும் உறங்கச் செல்லும் முன் பருகிவிட்டு, படுத்தால் உங்களின் சருமம் பொலிவடையும்.

இதோ மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்

வர மிளகாய் – 30

வர மல்லி – அரை கப்

கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

(வழக்கமான தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ளக்கூடாது. கொப்பரை தேங்காய்த் துருவல் எடுத்துக்கொள்ளவேண்டும். கொப்பரை தேங்காய் கடைகளில் கிடைக்கும்)

எள் – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு

செய்முறை

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, குறைவான தீயில் வர மிளகாய், வரமல்லி, கடலை பருப்பு, உளுந்து சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் நன்றாக பொன்னிறமாக வறுத்து வரவேண்டும்.

அனைத்தும் பொன்னிறமானவுடன், எள், கறிவேப்பிலை, கொப்பரைத் துருவலை கடைசியாக சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். ஆறியபின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு மாதம் வரை வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

பயன்படுத்துவது எப்படி?

சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் பொடியை சேர்த்து, சாம்பார் வைக்கவேண்டும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.