‘என் ஃப்ரண்டப்போல யாரு மச்சான்?’ ஒரு சிலரின் நட்பு வட்டம் மட்டும் அதிகம் இருக்க காரணம் - உளவியல் ரிப்போர்ட்!
Nov 08, 2024, 12:07 PM IST
என் ஃப்ரண்டப்போல யாரு மச்சான் என்று நீங்கள் நட்பு பாராட்டும் நபரா? ஒரு சிலரின் நட்பு வட்டம் மட்டும் அதிகம் இருக்க காரணம் என்ன என உளவியல் ரிப்போர்ட் கூறுகிறது.
ஒரு சிலரின் நட்பு வட்டம் மட்டும் அதிகம் இருக்கும். அதற்கு காரணம் என்ன என்று உளவியல் ரீதியாக சில உண்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நட்பு என்பது மனித வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நண்பர்கள்தான் நம் வாழ்வையே மாற்றுபவர்களாகவும், தீர்மானிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். உங்கள் நண்பன் யார் என்று கூறுங்கள், நீங்கள் யார் என்று நான் கூறுகிறேன் என்ற வாசகமும், நம்மை நம் நட்புகள் எப்படி வடிவமைக்கின்றன என்பதைக் குறிக்கிறது. நண்பர்கள் கூட்டமோ அல்லது ஒரு சில நண்பர்களோ, விழும்போது எழுப்பி விடுகிறார்கள். உறவுகளில் கூட துரோகம் அடிக்கடி நடைபெறும். ஆனால் நட்பில் அது இருக்காது. நட்பில் வரும் பிளவுக்குக் கூட அன்புதான் காரணமாகிறது. சிலருக்கு மட்டும் அதிக நண்பர்கள் இருப்பதற்கு காரணமாக இங்கு உளவியல் சில காரணங்களைக் கூறுகிறது. அவை என்னவென்று பாருங்கள்.
சமூகத்திறன்கள்
நல்ல சமூகத்திறன்கள் கொண்டவர்கள், யாருடனும் எளிதில் பழகிவிடுவார்கள். அவர்கள் எங்கும் முன்னெடுத்துச் செல்வார்கள். இதனால் அவர்களால் நண்பர்களையும் கவர்ந்து இழுக்க முடிகிறது. இது அவர்களின் நட்பு வட்டத்தை மேம்படுத்துகிறது.
தனிப்பட்ட குணங்கள்
நீங்கள் வெளிப்படையாக பழகும் நபர் என்றால், உங்களுக்கு எண்ணற்ற நண்பர்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அனைவருடனும் சகஜமாகப் பழகும் நபர்களுக்கும் எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் மற்றவர்களுடன் அவர்கள் விரைவில் பழகிவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு எவ்வித தடையும் இருப்பதில்லை. இது அவர்களுக்கு நல்ல பலத்தைக்கொடுக்கிறது.
கலாச்சாரம்
கலாச்சார பழக்கவழக்கங்கள் மற்றும் ஒற்றுமைகள், சமூக தொடர்புகளின் அளவை அதிகரிக்கிறது. வெளி நாடுகளில் வசிக்கும்போது, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி நட்பு பாராட்டுகிறார்கள். எனவே கலாச்சாரமும் நட்புக்கு அடிப்படையாக அமைகிறது.
பொதுவான ஆர்வங்கள்
பொதுவான ஹாபிக்களைக் கொண்டிருப்பதும், நட்புக்கு பாதை வகுக்கிறது. இதனால் நீங்கள் தொடர்புகொள்வது எளிதாகிறது. மேலும் அது உங்கள் நட்பு மற்றும் உறவை ஆழப்படுத்துகிறது. எனவே பொதுவான ஆர்வத்தால் நட்பானவர்கள், அதில் மேலும் தொடர்ந்து சென்று தங்கள் ஆர்வம் மற்றும் நட்பு இரண்டையும் ஒரே நேரத்தில் வளர்த்துக்கொள்கிறார்கள்.
நெருக்கம்
நெருக்கமாக இருப்பதும், உங்களின் தொடர்பை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு நல்ல வாய்ப்புக்களை வழங்குகிறது. இதுவும் அதிக நண்பர்கள் வைத்துக்கொள்வதற்கு காரணமாகிறது.
உணர்வு ரீதியான அறிவு
உணர்வு ரீதியான அறிவு அதிகம் கொண்டவர்கள், சமூக உறவுகளை வளர்த்தெடுக்கவும், அதை எளிமையான முறையில் கையாளவும் கற்றிருப்பார்கள். இதனால் அவர்களைச் சுற்றி நட்பு வட்டம் அதிகரித்திருக்கும்.
ஆதரவான சூழல்
குடும்பம் மற்றும் சுற்றம் இரண்டிலும் ஆதரவு கிடைக்கும்போது அது சமூக செயல்திறன்களை அதிகரிக்க உதவும். இதனால் நல்ல நட்புகள் அதிகம் கிடைக்கும். இதுவும் ஒருவரைச் சுற்றி அதிகம் இருக்க காரணமாகும்.
வாழ்க்கை அனுபவம்
பகிரப்பட்ட அனுபவங்கள், நாளாக நாளாக, ஆழ்ந்த உறவுகளுக்கு இட்டுச்செல்லும். இது மனிதர்களை புரிந்துகொள்ளவும் உதவும். ஆழ்ந்த உறவுகளைப் பெறுவதற்கு உங்களுக்கு பகிரப்பட்ட அனுபவங்களும் உதவும்.
பரஸ்பர உதவி
பரஸ்பர உதவி மற்றும் நம்பிக்கை இரண்டும், நட்பை வலுப்படுத்தும் அங்கமாகும். இதனால் உங்களுக்கு பரஸ்பர உதவி செய்பவர்களுடன் நட்பில் இருப்பது நலமாகும்.
மன ஆரோக்கியம்
சிறப்பான மன ஆரோக்கியம், உங்களுக்கு நட்பு மற்றும் உறவுகளின் வட்டத்தை அதிகரித்துக்கொள்ள உதவும். நல்ல மனஆரோக்கியம் இல்லாவிட்டால், அது உங்களின் உடல் நலனை பாதிக்கும். இதனால் உங்களுக்கு நல்லது. உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கவும் உதவும்.
டாபிக்ஸ்