கண்ணாடி அழகை காட்ட மட்டுமா.. அவ்வளவு விசயம் இருக்கு.. சரியான இடத்தில் வைத்தால் குடும்பம் செழிக்க உதவும் தெரியுமா!
வாஸ்து படி, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கண்ணாடி வைப்பது எப்போதும் மங்களகரமானது. வடகிழக்கு திசையில் வைக்கப்படும் கண்ணாடி செல்வத்தை ஈர்க்கும் என்பது ஐதீகம்.
நாம் நம்மை எப்படி அழுகு படுத்தி நேர்த்தியுடன் வைத்துக்கொள்கிறோம் என்பதை பார்க்கத்தான் கண்ணாடி வாங்குகிறோம். இன்று சந்தையில் பல விதமான டிசைன்களில் அழகான கண்ணாடிகள் கிடைக்கின்றன. சில சமயங்களில் நாம் வீட்டை அலங்கரிக்கும் நோக்கத்தில் அதிக விலை கொடுத்து வேலைப்பாடுகள் அதிகம் உள்ள கண்ணாடிகளை வாங்குகின்றோம். ஆனால் சில நேரங்களில் நாம் கண்ணாடிகளை வைக்கும் இடத்தை பொறுத்து நாம் கண்ணாடியை விலை கொடுத்து வாங்குகிறோமா அல்லது பிரச்சனையை விலை கொடுதது வாங்கிறோமா என்ற கேள்வி உருவாகிறது.
ஆம்,வாஸ்துவில் திசைகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வீட்டில் கண்ணாடிகளை நிறுவும் போது, வாஸ்துவின் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சரியான திசையில் கண்ணாடியை வைப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில், கண்ணாடிகளை வீட்டில் வைக்கும் போது எதிர்பாராத விதமான சில வாஸ்து தொடர்பான சிறு தவறுகள் நடத்தால் அது ஒரு நபரின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கண்ணாடியை நிறுவும் போது வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது செல்வம், மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றை ஈர்க்கிறது என்று கூறப்படுகிறது. நம் வீட்டில் கண்ணாடிகளை எந்த திசையில் வைத்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.. எந்த திசையில் வைப்பது தீராத கஷ்டங்களை கொடுக்கும் என்பது தொடர்பான வாஸ்து விதிகளை தெரிந்து கொள்வோம்.
வீட்டில் கண்ணாடியை நிறுவுவதற்கான வாஸ்து விதிகள்:
வாஸ்து படி, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கண்ணாடி வைப்பது எப்போதும் மங்களகரமானது. வடகிழக்கு திசையில் வைக்கப்படும் கண்ணாடி செல்வத்தை ஈர்க்கும் என்பது ஐதீகம்.
இது தவிர, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஒரு கண்ணாடி வைப்பது நிதி ஆதாயத்திற்கு நன்மை பயக்கும்.
வாஸ்து படி, வீட்டில் பழுப்படைந்தது, அழுக்கு மற்றும் உடைந்த கண்ணாடியை வீட்டில் கண்டிப்பாக வைக்க கூடாது. இப்படியான பிரச்சனைகள் கொண்ட கண்ணாடியை வைப்பது அந்த குடும்ப உறுப்பினர்களின் வாழ்வில் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பல வழிகளில் தடைகளை சந்திக்க நேரிடும் என்பது நம்பிக்கை.
கண்ணாடியை எங்கு வைக்க கூடாது
அதேபோல் நாம் மேற்கு அல்லது தெற்கு சுவரில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்து படி, சமையலறையில் கண்ணாடியை நிறுவுவது நல்லதாக கருதப்படுவதில்லை. இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
படுக்கையறையில் கூட கண்ணாடிகள் நிறுவப்படக்கூடாது என்று நம்பப்படுகிறது. கண்ணாடியில் படுக்கையின் பிரதிபலிப்பு வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
வாஸ்துவில் எண்கோண கண்ணாடியை நிறுவுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே சமயம் ஸ்டோர் ரூமில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்