தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வாயில் வைத்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடும் பதத்தில் கோதுமை அல்வா! தீபாவளியை ஜமாய்க்க மேலும் ஒரு ஸ்வீட்!

வாயில் வைத்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடும் பதத்தில் கோதுமை அல்வா! தீபாவளியை ஜமாய்க்க மேலும் ஒரு ஸ்வீட்!

Priyadarshini R HT Tamil

Oct 18, 2024, 06:12 PM IST

google News
வாயில் வைத்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடும் பதத்தில் கோதுமை அல்வா, தீபாவளியை ஜமாய்க்க மேலும் ஒரு ஸ்வீட் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
வாயில் வைத்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடும் பதத்தில் கோதுமை அல்வா, தீபாவளியை ஜமாய்க்க மேலும் ஒரு ஸ்வீட் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

வாயில் வைத்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடும் பதத்தில் கோதுமை அல்வா, தீபாவளியை ஜமாய்க்க மேலும் ஒரு ஸ்வீட் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தீபாவளி என்றாலே பட்டாசு, பலகாரம், புத்தாடைகள்தான். அதிலும் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முறுக்கு, அதிரசம், தட்டை என செய்யத் துவங்கிவிடுவார்கள். அதில் அல்வாவும் மிக முக்கியமான பலகாரம் ஆகும். அல்வா செய்வதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் அதை நீண்ட நேரம் கிளறவேண்டும். அதிலும் கோதுமை அல்வா என்றால், கோதுமையை ஊறவைத்து பால் பிழிந்து செய்யவேண்டும். அப்படி செய்யும்போது சூப்பர் சுவையில் அசத்தும். கோதுமை மாவைப் பயன்படுத்தியும் செய்யும் முறையும் உள்ளது. கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வது எளிது. அதை நீங்கள் விரைவில் செய்துவிடமுடியும். ஆனால் கோதுமையில் தயாரிக்கும் அல்வா மிகவும் கடினமான ஒன்றுதான். அதை ஊறவைத்து, அரைத்து பால்பிழிந்து கை வலிக்க கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் அதன் சுவையே அலாதியானது என்பதால், அதை கிண்டி எடுத்து வாயில் வைத்தவுடன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும்.

தேவையான பொருட்கள்

சம்பா கோதுமை – ஒரு கப்

நெய் – தேவையான அளவு

சர்க்கரை – 4 டம்ளர்

ஏலக்காய்த் தூள் – கால் ஸ்பூன்

முந்திரி – 75 கிராம்

அல்வா பவுடர் (சிவப்பு நிறம்) – அரை ஸ்பூன்

செய்முறை

கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிடவேண்டும். அடுத்த நாள் காலையில் ஊறி நல்ல மிருதுவாக இருக்கும். அதை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்து வெள்ளை துணியை வைத்து வடித்து பால் பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். 

அரைத்த கோதுமையையே மேலும் இருமுறைகள் அரைத்து மீண்டும், மீண்டும் பால் பிழிந்துகொள்ளவேண்டும். அந்தப்பாலை வெள்ளைத்துணியால் மூடிவைத்துவிடவேண்டும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் தண்ணீர் மேலாக தெளிவாக இருக்கும். பாலின் கெட்டித்தன்மை அடியில் தங்கியிருக்கும். அந்த தெளிந்த நீரையும் வடித்துவிடவேண்டும்.

தண்ணீர் வடித்தவுடன் அடியில் கோதுமை மாவு கூல் போல இருக்கும். இதில் அல்வா பவுடரை கலந்து வைத்துக்கொள்ளவிடவேண்டும்.

முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவேண்டும். பாகு பதம் மிகவும் முக்கியம். எனவே இந்த ஸ்டெப்பை மிகவும் கவனமாக செய்யவேண்டும். நெய்யை உருக்கி தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

தயாராக உள்ள சர்க்கரை பாகில் கோதுமை கூழை ஊற்றி தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அடுப்பை குறைவாக தீயில் வைக்கவேண்டும். கோதுமை கூழ் வெந்து வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சிய நெய்யை ஊற்றி அப்போதும் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு நொடி கூட கிண்டாமல் விடக்கூடாது கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். இதனை ஒருவர் செய்வது மிகவும் கடினம்தான். 2 பேர் கட்டாயம் சேர்ந்து செய்யவேண்டும். சிறிது கிளறாமல் விட்டால் கூட அல்வா கட்டியாகவிடும். எனவே மிகவம் கவனம் தேவை. கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

நன்றாக வெந்து, நெய் பிரிந்து வரத்துவங்குவதுதான் பதம். அப்படி வந்தவுடன், கையில் தொட்டுப்பார்க்கும்போது ஒட்டக்கூடாது. இந்தப்பதத்தில் ஏலக்காய் தூவிவிடவேண்டும். வறுத்த முந்திரி சேர்த்து கிளறவேண்டும். நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையில் அல்வா தயார். இதை இப்போது எடுத்து வாயில் வைத்தீர்கள் என்றால் வழுக்கிக்கொண்டு உள்ளே ஓடும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இந்த அல்வா இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிட ஏற்றது. எனவே இந்த தீபாவளிக்கு கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள். இனி ஒவ்வொரு ஆண்டும் செய்வீர்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி