தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  என்ன குலாப் ஜாமூன் இல்லமால் தீபாவளியா? நெவர்; என்பவரா நீங்கள்? இதோ ரெசிபி பிடியுங்கள்!

என்ன குலாப் ஜாமூன் இல்லமால் தீபாவளியா? நெவர்; என்பவரா நீங்கள்? இதோ ரெசிபி பிடியுங்கள்!

Priyadarshini R HT Tamil

Oct 29, 2024, 07:01 PM IST

google News
என்ன குலாப் ஜாமூன் இல்லமால் தீபாவளியா? நெவர்; என்பவரா நீங்கள்? இதோ கீழே ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் செய்து தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
என்ன குலாப் ஜாமூன் இல்லமால் தீபாவளியா? நெவர்; என்பவரா நீங்கள்? இதோ கீழே ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் செய்து தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

என்ன குலாப் ஜாமூன் இல்லமால் தீபாவளியா? நெவர்; என்பவரா நீங்கள்? இதோ கீழே ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் செய்து தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

தீபாவளிக்கு தயாராகிவிட்டீர்களா? தேவையான ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் என தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா? குலாப் ஜாமூன் இல்லாமல் தீபாவளியா? நெவர் என்பவரா நீங்கள். இதோ உங்களுக்காக இந்த குலோப் ஜாமூன் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, சூப்பர் சுவையான குலோப் ஜாமூன்களை தயாரித்து பயன்பெறுங்கள். குலாப் ஜாமூன் பிரியர் என்றால் எப்போது இந்த தீபாவளி அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். ஏனெனில் ரெடிமேட் குலாப் ஜாமூன் மிக்ஸ் விற்பவர்கள் அனைவரும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விற்றுக்கொண்டு இருப்பார்கள். நீங்களும் வாங்கி சுவைத்து மகிழலாம். ஆனால் மகிழ்ச்சியாக புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு கொண்டாடும் பண்டிகைதான் என்றாலும், சர்க்கரை வியாதி இருந்தால் கொஞ்சம் கவனமுடன் இருப்பதே நலன். இந்த தீபாவளியை கொண்டாடுங்கள். ஆனால், அனைத்து வகையிலும் பாதுகாப்பாக. இந்த குலாப் ஜாமூனை சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

ஜாமூன் ரெடிமேட் மிக்ஸ் பாக்கெட் – 1

சர்க்கரை – அரை கிலோ

ஏலக்காய் – 2

எலுமிச்சை பழச்சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்

திக்காக காய்ச்சிய பால் ஆடை திரண்டு வர – 1 டேபிள் ஸ்பூன்

ரோஸ் எசன்ஸ் – ஒரு ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

நெய் – சிறிதளவு

செய்முறை

ரெடி மிக்ஸ் மாவு எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட சில பிராண்டுகளில் உருண்டை நன்றாக வரும் அதை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்வது நல்லது. குலாப் ஜாமூனுக்கு மாவு பிசையும் பதம் மிகவும் முக்கியமானது.

அதை பாக்கெட்டில் இருந்து பிரிந்து உதிர கொட்டவேண்டும். உதிரியான மாவை கைகளால் நன்றாக உதிர்த்துவிடவேண்டும். மாவு நல்ல ஃப்ரி ஃப்ளோவாக இருக்கவேண்டும். அதில் கெட்டி பால், பாலின் ஆடை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும். மாவை தண்ணீர் ஊற்றி பிசையக்கூடாது. பாலை ஊற்றித்தான் பிசைய வேண்டும்.

நன்றாக திரட்டி மிருதுவாக பிசைய வேண்டும். மாவை அடித்து பிசையக்கூடாது. பஞ்சுபோல் மிருதுவாக பிசைந்துகொள்ளவேண்டும். திரண்டு வருவதற்கு லேசாக நெய்யை தொட்டுக்கொள்ளவேண்டும். நல்ல மிருதுவாக பிசைந்து அரை மணி நேரம் மூடி வைத்துவிடவேண்டும்.

சர்க்கரை பாகு தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறவேண்டும். சர்க்கரை முழுதாக கரைந்தவுடன் அதில் ஏலக்காய், ரோஸ் எசன்ஸ் சேர்த்துவிடவேண்டும்.

ஏலக்காயை பொடித்து சேர்த்தால் சிலருக்கு பிடிக்காது. எனவே அவர்கள் இரண்டு ஏலக்காயை முழுதாகவோ அல்லது உரித்தோ சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காயின் சுவை மற்றும் நலன் இரண்டும் கிடைத்துவிடும்.

இறுதியாக சர்க்கரைப்பாகை இறக்கும்போது, எலுமிச்சை சாறை சேர்க்கவேண்டும். பாகு கெட்டிப்படவோ அல்லது கம்பி பதமோ தேவையில்லை. எப்போது குலாப் ஜாமூன் மற்றும் ரசகுல்லா ஆகியவற்றுக்கு காய்ச்சும் பாகில் சர்க்கரை கரைந்தால் போதும்.

அடுத்து கையில் நெய் தடவி மாவை எடுத்து மிருதுவாக அழுத்தி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவேண்டும். விரிசல் இல்லாமல் உருட்டிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சூடானவுடன், சிறிய உருண்டைகளை எடுத்து ஒவ்வொன்றாக மீண்டும் உருட்டி எண்ணெயில் சேர்த்து, நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கொள்ளவேண்டும்.

உருண்டைகளைப் போட்டவுடனே கிளறிவிடக்கூடாது. வெந்த உருண்டைகள் தானாக மேலே எழும்பி வரும். பொன்னிறமாகும் வரை நன்றாக கிளறவேண்டும். உருண்டை உடைந்து விடாமல் அல்லது வெடித்து விடாமல் இருக்கவேண்டும். அதில் கவனம் செலுத்தவேண்டும். எண்ணெயும் பொரித்து எடுத்துக்கொள்ளும் அளவுக்கு தாரளமாக இருக்கவேண்டும்.

உருண்டைகள் ஆறியவுடன், அவற்றை சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்துவிடவேண்டும். 6 முதல் 8 மணி நேரம் ஊறினால் நன்றாக இருக்கும். நீங்கள் மாலையில் சாப்பிட விரும்பினால் காலையிலேயே செய்துவிடவேண்டும்.

பாகு மற்றும் உருண்டைகள் இரண்டும் ஆறியிருக்கவேண்டும். உருண்டைகள் சூடாக இருக்கும்போது சேர்த்தால் அது உடைந்துவிடும். எனவே கவனம் தேவை.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை