Buck Wheat: கோதுமையை விட பலமடங்கு நன்மையை கொண்டிருக்கும் பாப்பரை மாவு..தலைமுடி வளர்ச்சி, டயபிடிஸ் மற்றும் பல
Health Benefits of buckwheat: மரக்கோதுமை என்று அழைக்கப்படும் பாப்பரை மாவு பசியைத் தீர்ப்பதுடன், உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. இந்த மாவு உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
(1 / 8)
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் பல்வேறு விதமான உணவு வகைகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் பாப்பரை மாவு சார்ந்த உணவுகளும் நாட்டின் சில பகுதிகளில் நவராத்திரியின் போது தயார் செய்து சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள். நவராத்திர உண்ணாவிரதத்தின் போது இந்த பாப்பரை மாவு உணவுகள் பசியைத் தீர்ப்பதுடன் உடலுக்கு சரியான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது(shutterstock)
(2 / 8)
பாப்பரை மாவில் மெக்னீசியம், வைட்டமின் பி, இரும்பு, ஃபோலேட், கால்சியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன(shutterstock)
(3 / 8)
பாப்பரை மாவு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த மாவில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவாகக் கட்டுப்படுத்துகிறது(shutterstock)
(4 / 8)
கோதுமை மாவில் இருக்கும் பசையம் சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். இது செலியாக் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் பாப்பரை மாவு சாப்பிடலாம். இந்த மாவு பசையம் இல்லாதது மற்றும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக உள்ளது(shutterstock)
(5 / 8)
இதில் இருக்கும் நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உட்கொள்வது வயிற்றை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது(shutterstock)
(6 / 8)
பாப்பரை மாவு சார்ந்த உணவுகள் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் தலைமுடி பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்தலையும் குறைக்கலாம்(shutterstock)
(7 / 8)
பாப்பரை மாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது(shutterstock)
மற்ற கேலரிக்கள்