இஞ்சியையும் – சீரகத்தையும் சேர்த்து இந்த தேநீரை தயாரித்து பருகிப்பாருங்கள்! எண்ணற்ற நன்மைகளைத் தரும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இஞ்சியையும் – சீரகத்தையும் சேர்த்து இந்த தேநீரை தயாரித்து பருகிப்பாருங்கள்! எண்ணற்ற நன்மைகளைத் தரும்!

இஞ்சியையும் – சீரகத்தையும் சேர்த்து இந்த தேநீரை தயாரித்து பருகிப்பாருங்கள்! எண்ணற்ற நன்மைகளைத் தரும்!

Priyadarshini R HT Tamil
Oct 18, 2024 02:07 PM IST

இஞ்சியையும், சீரகத்தையும் சேர்த்து இந்த தேநீரை தயாரித்து பருகிப்பாருங்கள். எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும். இதன் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.

இஞ்சியையும் – சீரகத்தையும் சேர்த்து இந்த தேநீரை தயாரித்து பருகிப்பாருங்கள்! எண்ணற்ற நன்மைகளைத் தரும்!
இஞ்சியையும் – சீரகத்தையும் சேர்த்து இந்த தேநீரை தயாரித்து பருகிப்பாருங்கள்! எண்ணற்ற நன்மைகளைத் தரும்!

உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது

இஞ்சி மற்றும் சீரகத்தை சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர், உங்கள் உடலின் வளர்சிதையை இயற்கை முறையில் ஊக்குவிக்கிறது. சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இது செரிமான எண்சைம்களைத் தூண்டுகிறது. இஞ்சி, தெர்மோஜெனிசிஸை அதிகரிக்கிறது. உடலில் சூட்டை ஏற்படுத்துபவை தெர்மோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த உட்பொருட்கள் ஒன்றிணைந்து உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் கலோரிகளை நல்ல முறையில் எரிக்க உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

இஞ்சி மற்றும் சீரகம் இரண்டும் எண்ணற்ற செரிமான நன்மைகளைக்கொண்டது. சீரகம், செரிமான எண்சைம்களை சுரக்கச் செய்யும் வழிகளுள் ஒன்று. இஞ்சி வயிற்றுக்கு இதமளிக்கிறது. வயிறு உப்புசத்தைப் போக்குகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. இந்த தேநீர், உடலில் உணவு அதிகளவில் செரிக்கவும், கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.

பசியைக் கட்டுப்படுத்துகிறது

இஞ்சியில் பசியை கட்டுப்படுத்தும் குணங்கள் உள்ளது. சீரகம் உங்கள் பசி ஹார்மோன்களை முறைப்படுத்த உதவும். இஞ்சி-சீரக தேநீரை பருகுவது உங்கள் பசி மற்றும் அதிகம் உட்கொள்வதை தடுக்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுவது கலோரிகளை குறைக்க விரும்புபவர்கள் இந்த தேநீரைப் பருகவேண்டும்.

வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது

சீரகம் – இஞ்சி தேசீர், உங்கள் உடலில் இயற்கை முறையில் சிறுநீர் பிரிப்பை அதிகரிகரிக்கிறது. இதனால் நீரை தக்கவைக்கவும், உப்புசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. சீரகம் உடலில் உள்ள கூடுதல் நீர்ச்சத்துக்கள் மற்றும் நச்சுக்களை அடித்து வெளியேற்றுகிறது. இஞ்சியின் இதப்படுத்தும் தன்மை, உங்கள் செரிமான மண்டலத்துக்கு இதமளிக்கிறது. உங்கள் வயிற்றை தட்டையாக்கவும், வயிற்றுக்கு லேசான உணர்வையும் தருகிறது.

உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது

சீரகம் மற்றும் இஞ்சி உடலில் உள்ள கழிவுகளைப் போக்கும் தன்மை கொண்டது. சீரகம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இஞ்சி ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. தூய்மையற்ற பொருட்களை உடலில் இருந்து நீக்கும் உடலின் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இந்த கழிவு நீக்க செயல்பாடு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த வளர்சிதை மற்றும் உடலின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

கொழுப்பை கரைக்க உதவுகிறது

இஞ்சி மற்றும் சீரக தேநீர், கொழுப்பை சிறப்பான முறையில் கரைக்க உதவுகிறது. சீரகத்தில் உள்ள உட்பொருட்கள் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. இஞ்சி செரிமானத்தைத் தூண்டுகிறது. உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இதனால் உங்கள் உடல் கொழுப்பை ஆற்றலாக மாற்றுகிறது.

ரத்த சர்க்கரையை முறைப்படுத்துகிறது

சீரகம் மற்றும் இஞ்சியில் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவு இன்சுலின் திடீரென உயர்வதைத் தடுக்கிறது. இது கொழுப்பு சேமிக்கப்படுவதுடன் தொடர்புடையது. குறிப்பாக வயிற்றைச் சுற்றிலும் கொழுப்பு சேரக்கூடாது. உங்கள் ரத்த சர்க்கரை அளவை பாருங்கள். இந்த தேநீர் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நல்ல குடல் ஆரோக்கியம் என்பது உடல் எடையை குறைக்க மிகவும் தேவையான ஒன்று. இஞ்சி – சீரக டீ குடலில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது. சீரகம், குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இஞ்சியில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது குடல் எரிச்சலைப்போக்குகிறது. ஆரோக்கியமான குடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான வளர்சிதையை ஊக்குவிக்கிறது. உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

இஞ்சி – சீரகத் தேநீர் தயாரிப்பது எப்படி?

இஞ்சி-சீரகத் தேநீரை தயாரிப்பது மிகவும் எளிது. ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தை கொதிக்கவிடவேண்டும். அதில் சில துண்டு இஞ்சியைப்போட வேண்டும். அனைத்தையும் 7 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும். இதை வடிகட்டி, சூடாகப் பருகிப் பலன்பெறவேண்டும். இதை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் மிகவும் நல்லது. உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். இதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகலாம். அது சுவையையும் தரும். ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.