தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஊறவைத்த சியா விதைகளை தினமும் உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஊறவைத்த சியா விதைகளை தினமும் உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil

Oct 27, 2024, 08:10 AM IST

google News
ஊறவைத்த சியா விதைகளை தினமும் உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஊறவைத்த சியா விதைகளை தினமும் உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஊறவைத்த சியா விதைகளை தினமும் உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். சியா விதைகளை நீங்கள் பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் மறைந்துள்ள நன்மைகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். சியா விதைகள் மனிதர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கக்கூடியவை ஆகும். இதை நீங்கள் தினமும் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த விதைகளில் இருந்து அதிகளவிலான ஆரோக்கிய நன்மைகளைப் பெற வேண்டுமெனில், இவற்றை உட்கொள்வதற்கு முன்னர் சிறிது நேரம் ஊறவைத்துவிடவேண்டும். இதை நீங்கள் தண்ணீர் அல்லது பால் இரண்டிலும் ஊறவைத்து பருகலாம். சாதாரணமாக சாப்பிடுவதைவிட ஊறவைத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.

தாவர அடிப்படை கொழுப்பு கிடைக்கும்

சியா விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இது மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இது உங்கள் உடலில் கொழுப்பு அளவை சமப்படுத்துகிறது. ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்தது

சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்துக்கு நல்லது. இவற்றை ஊறவைத்து, சாப்பிடும்போது, அது ஒரு ஜெல் பதத்தில் மாறும், அது குடல் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. வயிறு உப்புசத்தை குறைக்கிறது. ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம்.

ஊறிய சியா விதைகளில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது

சியா விதைகளை நீங்கள் ஊறவைக்கும்போது, அது தண்ணீரை உறிஞ்சி அதன் எடையில் இருந்து 12 மடங்கு பெரிதாகிறது. இது உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. இவை தண்ணீரை மெல்ல வெளியிடுகின்றன. இதனால் உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்கள் கிடைக்கிறது. உங்கள் நீண்ட நேரம் நீர்ச்சத்துடன் இருக்க முடிகிறது. குறிப்பாக கோடைக்காலங்களில் உங்களுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை சியா விதைகள் கொடுக்கின்றன.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம்

சியா விதைகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது செல்களை, ஃப்ரி ராடிக்கல்கள் ஏற்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. எனவே ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடுவதால் வயோதிகம் தாமதமாகிறது.

உடல் எடையைக் குறைக்க சியா விதைகள் உதவுகிறது

ஊறவைக்கப்பட்ட சியா விதைகள், வயிற்றில் விரிவடைந்து உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கின்றன. இது உங்களின் பசியை கட்டுப்படுத்துகிறது. அதிகம் உணவு உட்கொள்வ தடுக்கிறது. உடல் எடையை குறைக்கும் உங்கள் முயற்சிகளுக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

சியா விதைகளில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சேர்க்கை, உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்களின் கெட்ட கொழுப்புக்களை குறைக்கவும், நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கவும் உதவுகின்றன. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

ஆற்றல்

சியா விதைகள், உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றன. சியா விதைகள் கார்போஹைட்ரேட்களை மெதுவாக வெளியிடுகின்றன. இது உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது.

எலும்பை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள்

சியா விதைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன. ஊறவைத்த சியா விதைகளை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டுமெனில், அது உங்கள் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது. எலும்புப்புரை நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

ஊறவைத்த சியா விதைகள், ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சும் திறனை மெதுவாக்குகின்றன. ரத்தத்தில் திடீரென சர்க்கரை உயரும் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி