தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வாரத்தின் 7 நாட்களிலும் நீங்கள் பாதாமை சாப்பிட்டு பாருங்களேன்; உங்கள் உடலில் என்ன நடக்கும்?

வாரத்தின் 7 நாட்களிலும் நீங்கள் பாதாமை சாப்பிட்டு பாருங்களேன்; உங்கள் உடலில் என்ன நடக்கும்?

Priyadarshini R HT Tamil

Oct 26, 2024, 06:18 PM IST

google News
வாரத்தின் 7 நாட்களிலும் நீங்கள் பாதாமை சாப்பிட்டு பாருங்களேன், உங்கள் உடலில் என்ன மாயம் நடக்கிறது என்று பாருங்கள்.
வாரத்தின் 7 நாட்களிலும் நீங்கள் பாதாமை சாப்பிட்டு பாருங்களேன், உங்கள் உடலில் என்ன மாயம் நடக்கிறது என்று பாருங்கள்.

வாரத்தின் 7 நாட்களிலும் நீங்கள் பாதாமை சாப்பிட்டு பாருங்களேன், உங்கள் உடலில் என்ன மாயம் நடக்கிறது என்று பாருங்கள்.

நீங்கள் வாரத்தின் 7 நாட்களிலும் பாதாமை சாப்பிட்டு பார்த்தால், உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்று உங்களால் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் உடலில் பாதாம் செய்யும் மாயம் என்னவென்று தெரிந்துகொள்ள முடியவில்லையென்றால், இதை படியுங்கள். தினமும் பாதாம் சாப்பிடுவது நமது பாரம்பரிய பழக்கங்களுள் ஒன்று. இதற்கு சான்றுகளும், நிரூபிக்கப்பட்ட முடிவுகளும் உள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் நீங்கள் பாதாமை சாப்பிடுவதால், உங்கள் உடலுக்கு பாதாமில் ஒளிந்துள்ள அத்தனை நன்மைகளும் கிடைக்கிறது. அது உங்கள் உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சரும ஆரோக்கியம்

பாதாம் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. இதில் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. வைட்டமின் இ, கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. ஒரு கைப்பிடியளவு பாதாமில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் எலும்பு ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவை மேம்படுத்துகிறது. உங்கள் உடலின் செரிமான ஆற்றலையும் அதிகரிக்கிறது.

உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது

பாதாமில் இதயத்துக்கு இதமான உட்பொருட்கள் உள்ளது. இதில் மோனோசாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது

உங்களால் பாதாம் வயோதிகத்தை தாமதப்படுத்தும் என்பதை நம்ப முடியவில்லையா? இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் இ உள்ளது. இது நீங்கள் பாதாம் சாப்பிடுவதை வழக்கமாக்கும்போது, நாள்பட்ட நோய்களான புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கிறது. செல்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, உங்களுக்கு வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.

உடல் எடை குறைப்பில் உதவுகிறது

இதன் அடர்த்தியான கலோரிகள், பாதாமை உடல் எடையை பராமரிப்பதில் உதவுகிறது. இதன் அதிகப்படியான நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கின்றன. இதனால் ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவு குறைகிறது. இது உங்களின் பசியைக் கட்டுப்படுத்தி, தேவையற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவதைத் தடுக்கிறது.

மனத்தெளிவை அதிகரிக்கிறது

பாதாமில் மனதுக்கு இதமளிக்கு உணவாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள ரிபோஃப்ளாவின் மற்றும் எல்கார்னிடைன் மற்றும் ஊட்டச்சத்துக்கள், மூளையின் திறனை அதிகரிக்கும் மற்றும் நினைவாற்றலையும் மேம்படுத்தும். பாதாம் உட்கொள்வதை நீங்கள் வழக்கமாகக்கொண்டால், அது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவு

நீங்கள் நீரிழிவு நோய்களால் அவதிப்பட்டு வந்தீர்கள் என்றால், பாதாம் உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. பாதாமில் உள்ள மெக்னீசியச் சத்துக்கள், உங்களின் இன்சுலின் சென்சிட்டிவிட்யை முறைப்படுத்துகிறது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. குறிப்பாக சாப்பிட்டவுடன் திடீரென உயரும் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள குறைந்த கார்போஹைட்ரேட் உட்பொருட்கள் மற்றும் அதிக ஆரோக்கிய கொழுப்புகள், இதை உங்கள் உடலின் குளுக்கோஸ் அளவை முறைப்படுத்த சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

சுருக்கங்களை போக்குகிறது

பாதாமில் உள்ள வைட்டமின் இ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. இது உங்களின் இளமை பொலிவை தக்கவைக்க உதவுகிறது.

செரிமான கோளாறுகள்

உங்களுக்கு செரிமான கோளாறுகள் இருந்தால், அதை போக்குவதற்கு பாதாம் உதவுகிறது. இதில் உயர்தர நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் செரிமான மண்டலத்துக்கு உதவி, உங்கள் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலைத் தடுக்கிறது. இது உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

எலும்பு ஆரோக்கியம்

பாதாமில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் அகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இது உங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. உங்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

பாதாமில் வைட்டமின் இ சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் பல நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் சிங்க் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் உடலில் ஏற்படும் தொற்றுக்களுக்க எதிராக போராடுகின்றன. இதனால் உங்கள் உடலுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது. எனவே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள உங்கள் உணவில் கட்டாயம் பாதாமை சேர்த்துக்கொள்ளுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை